நஜிப் தலைமைத்துவம் இந்தியர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

0
92

புத்ரா ஜெயா—பிரதமர் டத்தோ சிறீ நஜிப் துன் ரசாக் 2009 ஆண்டு பதவிக்கு வந்து, தற்போது ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகிறது. நாட்டுக்கு நிறைய நல்ல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். மலேசிய பொருளாதரத்தை மேன்மையடைய பல வித உருமாற்றுத் திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக இந்தியர்களுக்கு, மற்ற எந்த பிரதமரும் செய்யாத அளவுக்கு அதிகமான நன்மைகளை செய்திருக்கிறார். முன்னாள் பிரதமர் மகாதீர் காலத்தில் இந்தியர்கள் பின் தள்ளப்பட்டனர். ஆனால் டத்தோ சிறீ நஜிப் அவர்கள்  இந்தியர்கள் பொருளாதார மேம்பாடு அடையவும், தமிழ்ப்பள்ளிகள் பொலிவுற்று வளர்ச்சியடையவும் நிறைய நிதிகளை வழங்கியுள்ளார்.

தானே கீழே இறங்கி மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வருகிறார். மற்ற இனத்தவர்களுக்கு ஈடாக இந்தியர்களும் முன்னேற வேண்டும் என்று செயல்படும் பிரதமர் டத்தோ சிறீ நஜிப் ஆட்சியில் தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என்று அரசியல் ஆய்வாளர் டத்தோ அன்புமணி பாலன் தெரிவித்தார். – வி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here