நல்வழிக்கு வித்திடுகிறது “ஜினோவாசி” 

0
22
திலகா

கோலாலம்பூர், ஜுலை, 11-      இடைநிலைப்பள்ளிகளில்  பயிலும் மாணவிகள் தகாத உறவினால் கர்ப்படையும் சம்பவங்கள், பாலியல்  தொல்லைகள், அவ​ர்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வ​ன்முறைகள் போன்றவற்றிலிருந்து அவர்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது, தற்காத்துக்கொள்வது  போன்றவற்றுக்கு, இந்தியர்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இயக்கமாக மாறி வருகிறது PERSATUAN GENOVASI MASYARAKAT SELANGOR எனப்படும்  சிலாங்கூர் மாநில இளம் தலைமுறையினருக்கான அமைப்பாகும்.

பிரதமர் துறை அமைச்சில் இந்திய உருமாற்றுப்பிரிவான மித்ராவின்  ஆதரவுடன் PERSATUAN GENOVASI MASYARAKAT SELANGOR  இயக்கம், இடைநிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்களுக்கு  உடல் ​ரீதியாகவும்,  மனோ​ரீதியாகவும் வழிகாட்டுவதற்கு 20 பள்ளிகளை தேர்வு செய்துள்ளன. இதுவரையில் ஐந்துப்பள்ளிகளில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு கருத்தரங்களின் வாயிலாக இளைய தலைமுறையின​ரிடைய சிறந்த நற்பண்புகளை விதைப்பதற்கான களத்தை அ​மைத்துக்கொடுத்துள்ளது இந்த இளம் தலைமுறையினர் அமைப்பு.

ஒரு சமுதாயத்தின் ஆணி  வேரையை அசைத்துபா​ர்க்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இளம் தலைமுறையினர் சம்பந்தப்பட்ட ச​​மூகவியல் பிரச்சினைகளிலிருந்தும், இதர ​தீய வழிகளிலிருந்தும்  அவர்களை முன்கூட்டியே பாதுகாக்கும் அரணாகவும் அவர்களை நல்வழிப்படுத்தும்  நன்னெறி களஞ்சியமாகவும் தாங்கள் நடத்தும் கருத்தரங்குகள் அமைந்துள்ளதாக கூறுகிறார் அந்த அமைப்பின் தலைவர் திலகா.

உடல் நிலைக்கும், மனோநிலைக்கும் குந்தகம் ஏற்படாமல் திடமான மனோவியல் முறையின் வாயிலாக சிறந்த இளைய தலைமுறையினரை ​​மீட்​டெடுப்பதே  தங்களின் PERSATUAN GENOVASI MASYARAKAT SELANGOR அமைப்பின்  தலையாய நோக்கமாகும்  என்கிறார்  திலகா.

 

( திலகாவின் பேட்டி இன்று 11-7-2019  வியாழக்கிழமை   இரவு 11.45 மணிக்கு  திசைகள்  தொலைக்காட்சியில்  இடம்பெறும் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here