நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை நீட்டிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

0
9

மகளுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக பரோல் வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்த நளினிக்கு, ஒரு மாதம் பரோல் வழங்கி ஜூலை 5-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி ஜூலை 25 முதல் பரோலில் வந்த அவருக்கு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அக்டோபர் 15 வரை பரோல் நீட்டிப்பு வழங்கக் கோரி நளினி தரப்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதலில் மனுதாரர் நேரில் ஆஜரானார். அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. இரண்டு வாரங்கள் பரோல் நீட்டிப்பு கோரிய போது மூன்று வாரங்கள் பரோல் வழங்கப்பட்டது. தற்போதும் நீட்டிப்பு வழங்கக் கோருகிறார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும்,” என, பரோல் நீட்டிப்பு வழங்க நீதிபதிகள் மறுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.