நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

0
31
சென்னை, நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும். எனவே, தி.மு.க. தோழமை கட்சிகளும் கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், “நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும், தேர்தல் வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும், அயராது உழைக்க வேண்டும்” என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here