நான் ஆலோசனை மட்டுமே கூறினேன் -மலேசியப் போலீஸ்படை தலைவர் ஶ்ரீ அப்துல் ஹமிட்

0
47

கோலாலம்பூர், ஜூலை 13 – முன்னாள் போலீஸ் அதிகாரி முகமது அலி அமீர் பட்சாவிடம் தாம் எந்தவொரு வாக்குறுதியும் தரவில்லை என்றும் மாறாக, அவருக்கு சில ஆலோசனைகளை மட்டுமே கூறினேன்  என மலேசியப் போலீஸ்படை தலைவர் ஶ்ரீ அப்துல் ஹமிட் படோர் இன்று தெரிவித்தார்.

மேலும், வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் மன்றத்தில்  மேல் முறையீடு செய்வது அவரவர் உரிமையாகும் என்ற ஆலோசனை மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டது என தெளிவுப்படுத்தினார்.

அலி அமீரின் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் மன்றத்தில் மேல் முறையீடு செய்ய அப்துல் அமீட் உதவி செய்வதாக  கூறி உள்ளார் என்று தனது முகநூல் பக்கத்தில் முகமது அலி பதிவிட்ட செய்தியை   முற்றிலும் மறுத்தார் அப்துல் ஹமிட்.

நேற்று முகமது அலி அப்துல் மற்றும் ஹமிட் இடையில் நடந்த சந்திப்பிற்கு பிறகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் கூட்டதில், தனக்கு  சிலரால் அநியாயம் இழைக்கப்பட்டிருப்பதாகவும்  நாட்டின் சட்டத்தில் முறைகேடுகள் உள்ளதாகவும் அலி கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.