நயன்தாரா ஒரு சாதனை செய்துள்ளார். என்ன என்றால், தென்னிந்திய நாயகிகளில் இவரது புகைப்படம் மற்றும் பேட்டி தான் முதன் முதலில் ‘வோக்‘ இதழில் இடம்பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக தன்னை முன்னிலைப்படுத்தி வரும் கதைகளிலும், நாயகியாகவும் நடித்து வருவது குறித்து, “ஏன் இன்னும் சில நாயகர்களின் படத்தில் கவர்ச்சியான கதாநாயகியாக நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். சில நேரங்களில் வேறு வழி இல்லை. எவ்வளவு நாட்கள் தான் முடியாது என்று என்னால் சொல்ல முடியும்.
நான் ரிஸ்க் எடுக்கத் துணிபவள்” என்று தெரிவித்துள்ளார் நயன்தாரா. முன்னணி நாயகியாக இருப்பது குறித்த கேள்விக்கு, “வெற்றியை என் தலைக்கேற விட மாட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் எப்போதுமே ஒரு பயத்தில் இருக்கிறேன். சரியான படத்தை கொடுக்கமாட்டேனோ என்ற பயத்திலேயே வாழ்கிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.