நியு காலிடோனியாவில் பயங்கர நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை

0
9

தெற்கு பசிபிக்கின் நியு காலிடோனியாவில் கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில்  7.6 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனையடுத்து  சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நியு காலிடோனியாவின் லாயல்டி தீவுகளுக்கு 155 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பூகம்ப மையத்திலிருந்து சுமார் 1000 கி.மீ.க்குள்ளான பகுதிகளில் கடும் சுனாமிப் பேரலைகள் தாக்க வாய்ப்பிருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. நியு காலிடோனியா, வனுவாத்து பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here