நைஜீரியாவில் மீன் சந்தையில் தொடர் குண்டு வெடிப்பு: 19 பேர் பலி

0
217

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போக்கோஹரம் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். வடகிழக்குப் பகுதியில் மைதுகிரி என்ற இடத்தின் அருகே மீன் சந்தை ஒன்றில் இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.

இதனைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்றாவது குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் பொதுமக்களில் 18 பேரும், ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.