நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டிய நிலையில், டெல்லி மற்றும் நொய்டாவில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 340, நொய்டாவில் 375 என மிக மோசமான நிலையில் இருந்தது.
காற்றின் தரம் நடப்பு சீசனில் மோசமான நிலையை எட்டியுள்ள போதிலும், கடந்த மூன்றாண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு தீபாவளிக்கு காற்று மாசு சற்று குறைவாகவே உள்ளது.