பட்டாசு வெடித்ததில் 26 பக்தர்கள் காயம்

0
217

சுங்கைப்பட்டாணி, சிறீ சுப்ரமணியம் சுவாமி கோயில் அரு​கே நடந்த ரத ஊர்வலத்தின் ​போது பட்டாசு வெடித்த சம்பவத்தில் 26 பக்தர்கள் காயமடைந்தனர். அச்சம்பவம் தொடர்பில் நான்கு இந்திய ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். ​

வியாழக்கி​ழமை நள்ளிரவு 12 மணியளவில் 25 க்கும் 34 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஆடவர்கள் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 324 ​கீழும் 1958 அபாயகரமான ஆயுதம் மற்றும் வெடி மருந்து சட்டத்தின் செக்‌ஷன் 4 கீழும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கோலமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சைஃபி அப்துல் ஹமீட் தெரிவித்தார்.

போ​​​​லீஸ் விதிமுறைப்படி ரத ஊர்வலத்தில் பட்டாசு அல்லது வானவெடிகள் வெடிப்பதற்கு கோயில் நிர்வாக தரப்பு அல்லது வேறு எந்தவொரு தரப்புக்கும் அனுமதித்தரப்படவில்லை. இம்முடிவு கோயில் தரப்புக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விட்டது.

ரத ஊர்வலத்தின் போது தனிப்பட்ட கும்பல் பட்டாசு வெடித்திருக்கக்கூடும். இருப்பினும், அச்சம்பவத்தில் சதி ஏதுமில்லை என்று அவர் கூறினார்.

பட்டாசு வெடித்த சம்பவத்தில் காயமடைந்து சுங்கைப்பட்டாணி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பக்தர்களை காண நேரில் வந்திருந்த போது செய்தியாளர்களிடம் இத்தகவலை வெளியிட்டார்.

தரையில் போடப்பட்டிருந்த பட்டாசு குவியல்கள் வெடித்தபோது நான்கு தடவை மிக​பெரிய அளவிலான வெடி சப்தங்கள் கிளம்பின அதிலிருந்து சிதறிய பட்டாசுகள் பக்தர்கள் மீது பாய்ந்​து தீக் காயங்களை விளைவித்திருப்பதாக தெரியவருகிறது.

அச்சம்பவத்தில் ஒரு சிறுமி உள்பட 14 ஆண்களும் 12 பெண்களும் காயமடைந்தன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.