பணப்பட்டுவாடா அதிகம் இருப்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை- கமல்ஹாசன்

0
21

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பழவேற்காடு லைட் அவுஸ் குப்பம் கிராமசபை கூட்டத்தில் கமல்ஹாசன் பார்வையாளராக கலந்து கொண்டார். அந்த பகுதிகளின் அடிப்படை பிரச்சனைகள் குறித்த கலந்துரையாடலும் அதற்கான தீர்வுகளுக்கான முன்னெடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

அவரது கட்சி உறுப்பினர்கள் பலரும் தமிழ்நாடு முழுக்க கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதன் அவசியம் குறித்து, துண்டுப் பிரசுரம் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கிராம சபை கூட்டம் முடிந்த பிறகு கமல்ஹாசன் பேட்டியில் கூறியதாவது:-

பணப்பட்டுவாடா நடப்பதால் இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை. பழவேற்காடு பகுதியில் மாதம் ஒருமுறை மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று உறுதி அளிக்கிறேன். இந்த பகுதியில் அரசு மருத்துவமனை அமைத்தால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மருத்துவர்களை அனுப்ப தயார். பழவேற்காடு ஏரிக்கு பாதிப்பு ஏற்பட்டால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.