பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதல் ரேஷன் கடைகளில் காத்திருக்கும் மக்கள்

0
32
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இரண்டாவது நாளாக போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம், ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில்  இரண்டாவது நாளாக போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம், ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, பச்சரிசி, வெல்லம், திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சிறப்பு தொகுப்பை வாங்குவதற்காக, பனியையும் பொருட்படுத்தாமல் ரேஷன் கடைகளுக்கு அதிகாலையே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரே இடத்தில் 3 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு காலை 4 மணிக்கே வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் பொங்கல் பரிசு பெற்றுச் செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here