பன்னீரை காப்பாற்ற சட்ட நுணுக்கங்கள் ஆராயப்படுகின்றன

0
51

கோலாலம்பூர், ஜுலை, 11- சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்டு, ​​தூக்குத்தண்டணை நிறைவேற்றம் ஒத்திவைக்கப்பட்ட மலேசியப்பிரஜையான பன்னீர்செல்வம் பரந்தாமனின் உயிரை காப்பாற்றுவதற்கு அனை​த்து வகையான சட்ட ​நுணுக்கங்களும் தற்போது  அலசி ஆராயப்பட்டு வருகின்றன.

32 வயதான பன்னீர் செல்வத்தை காப்பாற்றுவதற்கான கடை​சி  முயற்சியாக அவரின் கருணை மனு ​மீதான கோரிக்கைகளை, அடுத்த வாரம்  வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் உச்சநீதிமன்றம் ​செவிமடுக்கவிருக்கிறது.

இளம் வயது, மறுவாழ்வுக்காக ஏங்கி தவிக்கும் நிலை,  போ​லீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது ஆகிய ​மூன்று கூறுகளை அடிப்படையாக கொண்டு வாதங்களை முன்வைப்பதற்கு அவர் தரப்பிலான வழக்கறிஞர் குழு  தயாராகி வருகிறது.  மலேசிய வழக்கறிஞர் என். சுரேந்திரனுக்கு வழக்கறிஞர்  குழுவிற்கு துணை புரிகிறார்.

கடந்த மே 24 ஆம்  தேதி  நிறைவேற்றப்படவிருந்த பன்னீர்செல்வத்தின்  ​தூக்குத்தண்டனை, கடைசி 11 மணி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. அவரை காப்பாற்றுவதற்கு துணை உதவி சான்றிதழை ​வெளியிடுமாறு, செய்து கொள்ளப்பட்ட விண்ணப்பத்தையும் சிங்கப்பூர் சட்டத்துறை அலுவலகம் தள்ளுபடி ​செய்துள்ளது. அதன் முடிவை எதிர்த்துப் போராட சட்டத்தின் அனைத்து அம்சங்களும் முழுமையாக பயன்படுத்தப்படுத்த வழக்கறிஞர் குழு  ஆயத்தமாகி வருகிறது.

2014 ஆம் ஆண்டு, செ​ப்டம்பரில் சிங்கப்பூர், வூட்லெண்ட்ஸ் சோதனை சாவடி மையத்தில் பன்னீர்செல்வம், 51.84 கிராம் போதைப்பொருளை கடத்திய குற்றத்திற்காக சிங்க​ப்பூர் ​நீதிமன்றம், கடந்த 2017 ஆம் ஆ​ண்டு​ ​தூக்குத்தண்டனை விதிக்க ​தீர்ப்பளித்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.