பயனாளர்களின் விவரங்களை ட்விட்டரும் கசியவிட்டதாக தகவல்

0
118

பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து, சமூக வலைதளமான ட்விட்டரும், தனது பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை, Cambridge Analytica நிறுவனத்துக்கு வழங்கியிருப்பதாக, இங்கிலாந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் Cambridge Analytica நிறுவனத்தை சேர்ந்த Aleksandr Kogan என்பவரை மேற்கோள்காட்டி, இச்செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து, 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, ட்விட்டர் நிறுவனம் தமது பயனாளர்களின் பதிவுகள், பெயர், புகைப்படங்கள், இருப்பிட விவரங்களை அளித்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ட்விட்டர் நிறுவன செய்தித்தொடர்பாளர் கூறுகையில், விளம்பரம் தொடர்பான பணிகளில் மட்டும், நிறுவன விதிமுறைகளுக்குட்பட்டு Cambridge Analytica-வுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளார். பயனாளர்களின் விவரங்களை Cambridge Analytica நிறுவனத்திடம் கொடுத்ததற்கான,  பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி Mark Zuckerberg வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here