பயெர்ன் மூனிக் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது

0
147

ஜெர்மனி பண்டேஸ் லீகாவின் நடப்பு வெற்றி அணியான பயெர்ன் மூனிக் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. பயெர் லெவர்கூசன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-1 எனும் கோல் எண்ணிக்கையில் பயெர்ன் மூனிக் வெற்றி பெற்றது. 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு பயெர்ன் மூனிக், பயெர் லெவர்கூசனை அதன் சொந்த அரங்கில் தோற்கடித்துள்ளது.

பயெர்ன் மூனிக்கின் முதல் கோலை ஹாவி மார்டினேஸ் போட்டார் 32ஆவது நிமிடத்தில் புகுத்தினார். ஆட்டத்தின் 59ஆவது நிமிடம், பிரேன் ரிபேரி இரண்டாவது கோலைப் போட்டார். இவரின் இந்த கோல அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பயெத் லெவர்கூசனின் ஒரே கோலை கேவின் புகுத்தினார். ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஜேம்ஸ் ரோட்ரிகுவெஸ் பயெர்ன் மூனிக்கின் மூன்றாவது கோலைப் போட்டார். இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகள் வித்தியாசத்தில் பயெர்ன் மூனிக் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here