பழைய கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

0
20
1999-ம் ஆண்டு,  இந்தியாவில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில், மகராஜ் கஞ்ச் மாவட்டத்தில்  போலீஸ் அதிகாரி சத்ய பிரகாஷ்  என்பவர் கொல்லப்பட்டார். அப்போதைய கோரக்பூர் எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத் இந்த வழக்கில் தொடர்பு இருப்பாதாய் குற்றம் சாட்டப்பட்டார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.

இந்தக் கொலை வழக்கிற்கும் யோகி ஆதித்யநாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் யோகி ஆதித்யநாத்தை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கியது.

சிறப்பு நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.