பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல்: இம்ரான் கான் கடும் கண்டனம்

0
37
பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இந்து கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் சாமி சிலைகள் மற்றும் புனித நூல்களை தீயிட்டு கொளுத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள காயிற்பூரில் நடந்த இந்த சம்பவத்தால் இந்து மக்களிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“சிந்து அரசு இந்த சம்பவம் தொடர்பான உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குரான் கற்றுக்கொடுத்துள்ள பண்புகளுக்கு எதிரானது” என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே இந்து கோயில்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து மக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here