பாகிஸ்தான் பொருளாதார விவகாரங்களில் சீனாவின் தலையீடு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் – சர்வதேச நிதியம்

0
213
பாலி, பாலியில் நடந்த சர்வதேச நிதியம்  மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பேசும் போது,
பாகிஸ்தான் இன்னும் முறையாக நிதியுதவிக்கான சர்வதேச நாணய நிதியத்திடம் அணுகவில்லை,   பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தால், பாகிஸ்தான் அதன் முழு திறனை அடைவதற்கு உதவுவதாக செவ்வாயன்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் தற்போது பொருளாதார சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், சர்வதேச நிதியத்திடம் கடன் கேட்க தயங்குவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவுடனான நட்பில் விரிசல் ஏற்பட்ட நிலையில் சீனாவுடன் நெருங்கி வரும் பாகிஸ்தான் அந்நாட்டின் உதவியுடன் “சில்க் ரோடு” திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது.
பாகிஸ்தானின் போக்குவரத்து மற்றும் எரிசக்தி துறையில் ஏற்கனவே சீனா பெருமளவு முதலீடு செய்துள்ள நிலையில் மீண்டும் சீனாவிடம் கடன் கேட்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இது பாகிஸ்தானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.