பாஜகவுக்குப் பிரச்சினை வரும்போதுதான் ரஜினி குரல் கொடுப்பார்

0
22

இந்தித் திணிப்பு குறித்து குழப்பமாகத்தான் ரஜினி பேசியிருக்கிறார். பொதுவான மொழி இருக்கவேண்டும் என்கிறார். இது வாழைப்பழத்தில் வழுக்கிவிட்டுப் பேசியது போல உள்ளது. இதே கருத்தை அவரை கர்நாடகாவில் போய் பேசச் சொல்லுங்கள். இந்தி விவகாரத்தில் அங்கேயே பாஜகவை எதிர்த்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா தீர்மானம் போட்டிருக்கிறார்.

பாஜகவின் குரலாகத்தான் ரஜினி ஒலிக்கிறார். பேனர் விவகாரத்தில் ரஜினி கருத்து சொன்னாரா? ஏன் அதுகுறித்து அவர் வாய் திறக்கவில்லை? தமிழக மக்களுக்குத் தேவையான செய்திகளுக்கு அவர் வாய் திறக்க மாட்டார். ரஜினி பாஜகவின் ஊதுகுழல். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு ரஜினியின் கருத்துகள் முழுக்க பாஜகவுக்கு ஆதரவாகவே உள்ளது. இந்தியை அவர் எதிர்க்கட்டும் அல்லது ஆதரிக்கட்டும். இரண்டும் கெட்டானாக அவர் பேச வேண்டாம்” என்றார் ஜெ.அன்பழகன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.