பாதுகாப்பை உறுதிசெய்ய வலிமையான சட்டம் தேவை – மருத்துவர்கள் போராட்டம்

0
55

 

மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் திங்கள்கிழமை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் (Indian Medical Association) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் கவனக்குறைவே அவரது இறப்புக்குக் காரணம் எனக் கூறி, நோயாளியின் உறவினர்கள் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது, பரிபஹா முகர்ஜி என்ற பயிற்சி மருத்துவருக்கு மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உலக மருத்துவக் கூட்டமைப்பும் சுகாதார மையங்களில் வன்முறையைத் தடுக்க வலிமையான சட்டம் இயற்ற வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளது.

மருத்துவர்களின் மீதான தாக்குதலைக் கண்டித்து, இந்திய மருத்துவக் கூட்டமைப்பு இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியுள்ளது. மருத்துவமனைகளின் முன்பாக கறுப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.