பாதேக் பூர்வக்குடியினரின் சவக்குழி மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

0
14

 

பாதேக் பூர்வக்குடியினரின் சவக்குழியை போலீஸ்சார் இன்று மீண்டும் தோண்டி எடுத்தனர். மே 29 அன்று கம்போங் குவால கோ-வில் நுரையீரல் தொற்று கிருமிகளினால் காலமான ரோமின் ஹம்டான் என்பவரின் சவக்குழி மீண்டும் தோண்டப்பட்டது.

குவா மூசாங் மாவட்ட போலீஸ் அதிகாரி சுப்ரின்டன் முகமட் தவ்ஃக் மைடின் செய்தியாளர்களிடம் கூறுகையில், சவக்குழி தோண்டும் வேலை இன்று முறையாக மேற்கொள்ளப்பட்டு அச்சடலம்  குவா மூசாங் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக மாலை 3.40க்கு அனுப்பப்பட்டது.

மேலும் அவர் கூறுகையில் ரோமின் ஹம்டானின் உடலின் மீது ஏற்கனவே சவப்பரிசோதனை மேற்கொள்ளபட்டுவிட்டதாகவும் இது இரண்டாவது  முறையாக சோதனைக்காக அனுப்பட்டுள்ளது என்றார்.

பூர்வக்குடியினரின் திடீர் மரணத்திற்கு காரணம் கண்டுபிடிக்காத நிலையில் இந்த சவப்பரிசோதனை இரண்டாவது மு
றையாக மேற்கொள்ளப்படுவது அவசியம் என்றார் தவ்ஃக்.

மற்ற சடங்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார் மேலும் 4 உடல்களை கண்டறிந்துள்ளனர். காட்டில் நடந்தே இந்த தீவிர தேடல் பணி போலீசாரால் நடத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டார். இன்னும் 4 சடங்களைத் தேடும் பணி நாளை தொடரும் என மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here