பாப்புவ நியூ கினியாவில் குழந்தைகள் , கர்ப்பணி பெண்கள் கொலை

0
12

பாப்புவா நியூ கினியாவில் நடைபெற்ற வன்முறையில் நிறைய குழந்தைகளும் கர்ப்பணி பெண்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 24 பேர் இந்த வன்முறையில் பலியாகி உள்ளதாகவும் இன்னும் சில ஊடகங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக கணக்கெடுத்து கூறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பாப்புவ நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மரப்பே இந்த வன்முறை தொடர்பாக கேள்வி கேட்கையில், அவர் தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் இது என கூறினார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஹகூய்,ஒகிரு மற்றும் லிவி பழங்குடியினருக்கு தகுந்த தண்டணை வழங்கப்படும் என அவர் சொன்னார். முன்பு  ரிவல் பழங்குடியினருக்கும் ஹகூய்,ஒகிரு மற்றும் லிவி  பழங்குடியினருக்கும் நடந்த சண்டையைத் தொடர்ந்து பழிவாங்கும் எண்ணத்தில் இவர்கள் இந்த மனிதமற்ற தாக்குதலை நடத்து உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here