பாரிசான் கூட்டணியை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்

0
219

பாரிசான் கூட்டணியை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் ?

பக்காத்தான் ஹராப்பானை ஏன் புறக்கணிக்க வேண்டும்?;

மக்கள் உணரவேண்டிய  ஐந்து காரணங்கள் என்ன?

  • எதிர்க் கட்சிகள்; இதுவரை ஒரே கூட்டணிக்குள் இருப்பதாகவோ அல்லது ஒரு கட்டுப்பாடான அமைப்பானதென்றோ சொல்ல முடியாத அளவுக்கான சிக்கலோடுதான் இருந்து வருகிறது .

அதனாலே,அவை,தனிதனி தேர்தல் கொள்கை அறிக்கைகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் ,அந்தந்த கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுவதும்  ஒரே சின்னம் ஒரே கொடி,ஒரு நோக்கம் என்ற வட்டத்திற்குள்  இதுவரை வராமல் இருப்பதும்; அதனுடைய வேடிக்கையான அரசியலாக இருந்து வருகிறது.

அதனால்தான் அந்தந்த கட்சிக்களுக்கான தனி அஜண்டாக்கலோடு பயணிக்கவே அவை விரும்புகின்றன என்பது தெளிவானதாகும்,ஒரு கூட்டணிக்குள்ளே கூட்டாட்சித் தத்துவம் உறுதிப்பெற வில்லையென்றால், —

நாளைக்கு இக்கூட்டணி அமைக்கப்போவதாகச் சொல்லப்படும் ஆட்சியமைப்பிலும் ஏகப்பட்ட முரண்பாடுகளும் நடைமுறை சிக்கல்களும் கடுமையாக எழவே செய்யும்.அதனால் மக்கள் நிலையற்ற

அரசு அமைப்பால் தேவையற்ற குழப்பத்தை அடைவார்கள்.

எனவே, ஒரு கூட்டணிக்குள் இருக்க வேண்டிய; குறைந்த பட்ச இணக்கமும், தொலைநோக்குரிய இலக்கும் ,அறவே பின் பற்றப்படாமல்  இருக்கும் நிலை தொடருமேயானால், அது தேர்தலுக்காகவும் தொகுதி உடன்பாட்டிற்காகவும் அமைந்த ஒரு கூட்டணியாகவே  கருத இடமளிக்குமேயொழிய ,

அது;எந்தவகையிலும் மக்களின் எதிர்காலத்திற்கான நல்லாட்சிக்குரியதாகவும் பல இன மக்களின் மனோபாவங்களையும்  எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றித் தருகிற ஒன்றிணைத்த கட்டமைப்புள்ள கூட்டணியாக நிச்சயமாக இருக்க முடியாது.

எனவே அப்படிப்பட்ட கூட்டணியால், மக்கள் எந்தவகையான நன்மையையும் அடைந்திட முடியாது. இன்றைக்கு ஹராப்பான் கூட்டணியின் நிலைபாடும் அப்படித்தான் தொடர்கிறது.

அதனால்தான், அது மக்களுக்கான கூட்டணித்  தர்மத்தை முற்றாக  மீறியிருக்கிறது  இப்படி ஒவ்வொரு கட்சியும் தங்களின் தனிதனி  மேலாதிக்கத்தை முன்னிலைப் படுத்தி வெற்றி பெறுமேயானால் அதனால் மக்கள் நலம் எவ்வளவு பாதிப்புக்குள்ளாகும் என்று எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.

அதனாலே  ஒரு கூட்டணியானது,அதைத்  தெரிந்தும் அல்லது புரிந்தும்

மக்கள் நிலையை அறிந்தும்  செயல்படுவதில் மிகவும் குறியாகயிருக்க வேண்டும் அதேவேளை மக்களுக்கான உண்மை நிலையை அப்பட்டமாக  உணர்த்த உணர வைக்க வேண்டிய பொறுப்பும் எல்லாத்தரப்புக்கும் பொதுத்தேர்தலில் இருக்க வேண்டியது அவசியமாகும்

எனவே, இதுவரை ஹராப்பானுக்கு மக்களின் ஆதரவானது; வேடிக்கைப் பார்க்க வந்த, பொதுக்கூட்டம் என்றளவிலேயே  நிலைபெற்றுள்ளது. என்று கருதுவதற்குதான்  இடமளித்திருக்கிறது.

அதனால், மக்கள் எதை வைத்து, துணிச்சலாக  நம்பிக்கையோடு வாக்களித்து வெற்றிப்பெற வைக்க முடியும் எனவே,நம்பகத்தன்மையை அக்கூட்டணி முற்றாக இழந்துள்ளதாகவே  கணிக்க முடிகிறது.

2)அடுத்து ;பிரதமர் வேட்பாளர் யார்? சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார்தான் பிரதமர் என்றால், பொதுத்தேர்தலில் அவரின் நிலைபாடுதான் என்ன?அவரும் இல்லை; அவருக்கு அடுத்து அவரின் வாரிசுகள் என்றளவில் அவர் மனைவி வான் அசிசாவா?  அல்லது அவரின் மகள் நூருல் இசாவா?  அதற்கு,  சரியான பதில் எங்கே?; அரசியல் களத்திலும் தேர்தல் களத்திலும் நிச்சயமாக விளக்கம் தேவைப்படுகிறது.

அதாவது;அன்வாரின் ஒட்டுமொத்த குடும்பம் மட்டுமல்ல,??அல்லது துன் மகாதீர்தான் பிரதமர் என்றால், அதற்கு இன்றைககுரிய தேவையென்ன? அல்லது அவருமல்ல, டான்ஸ்ரீ மொகிதீன்தான் என்றால் அதற்கு இன்றைக்குரிய சாத்தியப்பூர்வந்தான் என்ன?

சரி,அப்படியும் இப்படியுமல்ல, ஜசெக விலிருந்து ஒரு மலாய்க்காரர் இறக்குமதியாவார் என்றால், அதற்கான நடைமுறை சாத்தியந்தான் எப்படி இருக்கிறது? இதை மலாய்க்காரர்களின் தலைமைத்துவத்தைக்

கொண்டுள்ள கட்சிகளால் ஏற்க முடியுமா?

அதாவது;17 ஆண்டுகளுக்கு முன், எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு அன்வார்தான் பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து வழியே; 2001 ஆம் நடைபெற்ற பொதுத்தேர்தலிருந்து முன்னிலையாக அவர் பெயர்தான் நிலை நிறுத்தப்பட்டு வந்துள்ளது,

ஆனால், இன்றைக்குரிய நிலைபாடுதான் என்ன?அன்வார்  இரண்டு முறை ஓரினப்புணர்ச்சி வழக்கில் சிக்கிச் சிறைக்குப்போனவரென்றால், எப்படிப்பட்ட பிரதமரை இந்த நாடு எதிர் நோக்க வேண்டியுள்ளது?

அந்த வழக்கும் தண்டனையும்;  பொய்யென்றால், இன்றைய மகாதீர் அன்றைக்கு அன்வாரை சிறைக்கு அனுப்பியதும்  பொய் வழக்கால்தானா?

அதற்கு; மகாதீரிடமிருந்து இதுவரை சரியான பதில் வரவில்லையே ஏன்? இந்த நிலைபாட்டை?. எதிர்க்கட்சியினர்  விளக்க வேண்டுமல்லவா? எனவே,எதுவெல்லாம் பொய்? எதுவெல்லாம் உண்மை?

அதற்கு சரியான தீர்வைச் சொல்ல வேண்டியது மகாதீர்தான்; என்றாலும் ,அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியுமில்லை

யென்றாகும் போது; நாளைக்கு டத்தோஸ்ரீ நஜிப்பும் நண்பராகலா

மல்லவா?

எனவே,இன்றைய எதிர்க்கட்சிக்கூட்டணிக்கு தலைமையேற்றுயிருக்கும் மகாதீர்தான் அடுத்த பிரதமர் என்பதும் ஒரு விநோதமான சந்தர்ப்பவாத அரசியலாக்கப்பட்டிருப்பதால் அவரின் கடந்த கால குற்றச்சாட்டுகளிருந்து அன்வார் எப்படி விடுபட முடிந்தது?

அதேவேளை இதே மகாதீர்,1986 ஆம் ஆண்டுவாக்கில் உள்நாட்டுப்பாதுக்காப்பு சட்டத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட,எதிர்க்கட்சி அரசியல் வாதிகளையும்,பொது நிலைப்போராளிகளையும்,மாறுப்பட்ட கருத்துடையோரையும்

குறிப்பாக ஆளுங்கட்சியிலே அங்கம் பெற்றிருந்த  சில முக்கியத் தலைவர்களையும் கூட, இனவாதிகள் கீழறப்புவாதிகள் என்றளவில் எந்தவகையான விசாரணையுமின்றி சிறைக்கு அனுப்பி சித்திரவதைக்கு ஆளாக்கியவர்தானே?

இன்றைக்கு; அப்படிப்பட்ட அவரே எதிர்க்கட்சி அணிக்குத்தலைவரென்றால், தோழர் லிம் கிட் சியாங்கும் அவரின் ஜசெகவும் இன்று மகாதீருடன் நடத்துவது சந்தர்ப்பவாத அரசியலா? அல்லது மகாதீர் தலைமையில் அமைத்துள்ளதுதான் சந்தர்ப்பவாத கூட்டணியா? என்ற கேள்விக்கு சரியான பதில் அவர்களிடமிருந்து தேவைப்படுகிறதா, இல்லையா?

எனவே, மகாதீர் ஆட்சியில் எதுவெல்லாம் நல்லது? எதுவெல்லாம் கெட்டது? எதுவெல்லாம் தவறென்று எதையெல்லாம் உணர்ந்து இன்று அவர் பாவமன்னிப்பு கேட்கிறார்?

அவரால் சொல்லப்பட்ட அல்லது அவரால் அமல்படுத்தப்பட்ட சட்டமெல்லாம் இன்று மட்டமாகி விட்டதா? அப்படியென்றால் அன்று அவை எப்படி சட்டமாகியது?என்பதை மக்களுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு   தோழர் லிம் கிட் சாங் -க்கும் அவரின் மகன் லிம் குவாங் எங்கிற்கும் உண்டுதானே?

அன்று,  மலாக்கா முன்னாள் முதலைமைச்சர் டான்ஸ்ரீ  ரகிம் தம்பி சிக் பாலியல் வழக்கில் சிக்கியபோது, அது குறித்து கருத்துத் தெரிவித்தற்காக  , மகாதீர் அரசு தொடுத்த வழக்கால்—

குவாங்கின்  இரண்டு வருடக்காலம் சிறைத்தண்டனையையும் தமது நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியையும் இழப்பதற்கும் காரணமானவர் மகாதீர் என்பது மறந்து போய் விட்டதா?

இன்றைக்கு; எப்படி எதனால் அவரை இவர் மன்னித்தார் .இவரை அவர் மன்னித்தார்?, இத்தகைய காரணங்களால் எப்படியெல்லாம் அரசியல் நடத்தப்பட்டது? எப்படியெல்லாம் நாட்டு மக்களிடையே ஒப்பாரி வைக்கப்பட்டது? என்பதை இந்த ஜனநாயகவாதிகள் விளக்கத்தானே வேண்டும்.?

கர்பால் சிங், தோழர் பெ. பட்டு, டாக்டர் வி.டேவிட் போன்றவர்களெல்லாம் மகாதீரின் கொடுங்கோன்மைக்கு உள்ளாகி மனவுளைச்சலுக்கு இலக்காகி நிம்மதியின்றி தவித்த நாட்களையும் அவர்களின் இறுதிகால இறப்புகளையும் ஒரு கணம் எண்ணிப்பார்த்தால்;

எவ்வளவு மோசமான சந்தர்ப்பவாதமான கூட்டணியை மகாதீருடன் லிம்மும் அவரின் மகன் குவாங்கும், அவர்களின் ஜசெகவும் முன்னெடுத்துள்ளது என்பதை  எண்ணிப் பார்ப்பதோடுமட்டுமல்ல,

எவ்வளவு மோசமான நம்பிக்கைத் துரோகத்தை அக்கட்சியின் உறுப்பினர்களுக்கும் அதன் முன்னையத் தலைவர்களுக்கும் இவர்கள் செய்திருக்கிறார்கள் .என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.

இதற்கெல்லாம் சரியான பதிலும் தீர்வையும் காணாமல் இருக்க முடியுமென்றால், எப்படிப்பட்ட சந்தர்ப்பவாதமான கூட்டணியாக ஹராப்பான் இருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க முடியாமலா வருகின்ற பொதுத்தேர்தலை இந்த கூட்டணி கடந்துசெல்ல முடியும்?

இதே மகாதீர் ;மலாய் டெலிமாவை தந்தவர்தானே ?அந்த மலாய் டெலிமாவை  தவறான கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டதென்று,இன்று பாவமன்னிப்பு கேட்டாரா? அந்த நூலில் மகாதீர் முன் வைத்த    கருத்தின் அடிப்படையில்தானே அவரின் 22 ஆண்டுகாலஆட்சியும் நடைபெற்றது.

அந்த நூலில் குறிப்பிட்டுள்ளவாறுதானே  சீனர்களுக்கான அரசியல் புறக்கணிப்புகளும் , இந்தியர்களின் நல்ல வாழ்வியலுக்கான புறக்கணிப்புகளும்   நடைபெற்று முடிந்தன.

அத்தகைய போக்கு சரிபட்டு வராது என்ற அடிப்படையில்தானே  தேசதந்தை துங்கு  அந்த நூலுக்குத் தடையும் விதித்தார்.இன்று லிம் போன்ற ஜனநாகவாதிகள் ஏன் அவ்வளவு சீக்கிரத்தில் அதை மறக்க முயலுகிறார்கள் ?அதை  நினைத்தால் இன்று வியப்பாகத்தான் இருக்கிறது.

இப்படிப்பட்ட இவர்கள்தான் அம்னோவையும்,மசீ சவையும்  ம இ காவையும் அதன்  தலைவர்களையும் குறைச்சொல்லியே தங்களின் அரசியல் வாழ்வாரத்தைச்  சுயநலப்படுத்திக்கொண்டு வந்துள்ளனர்.

ஜசெகவைச் சேர்ந்த திருவாளர்கள் குலசேகரன், சிவக்குமார்,சிவநேசன், இராமசாமி, கணபதிராவ்,கோவிந்சிங்,ராம்சிங் போன்றவர்கள் ,

அன்று மகாதீருடன்,இணைத்து முன்னைய ம இ கா தேசியத்தலைவர், துன் சாமிவேலுவையும்  திட்டித்தீர்த்த கதையை அவ்வளவு விரைவில் மறந்து விட்டது வியப்பைத்தான் தருகிறது.

அதாவது; இவர்களின் கூட்டணியில் மகாதீர் வந்து புகுந்தால் புனிதராகி விடுவார், அவர் அம்னோவிலோ, அல்லது பாரிசானிலோ கொடி பிடிக்கும் போது மட்டும் ,எதிரியாகிவிடுவார்? இவர்கள் எப்படிப்பட்ட ஜனநாகவாதிகள் என்பதை இன்னுமா மக்கள் புரிந்து கொள்ளாமல்  இருக்க முடியும்?

  • நாட்டு நிர்வாகத்தில் நடக்கும் ஊழல், களவாணித் தனங்களையெல்லாம் எதிர்க்க வேண்டும் ,அதற்கு ஆதரவளிக்கக்கூடாது என்பதில் இரண்டுவகையான கருத்துக்கு இடமளிக்க முடியாது என்றாலும்

இன்று- 1,எம்-  டி-  பி-யில்(1MDB) -பெரிய  நிதி முறைகேடு ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகளை நாள் தோறும் குவித்துவரும்  லிம் கிட் சாங்,கும் அவரின் கூட்டத்தாரும்,

அன்று மகாதீர் தலைமையிலான  பெர்வாஜாவில்( perwaja) 7 பில்லியனுக்கு மேல் முறைகேடு நடைபெற்று(7000 கோடி)எப்படி அந்த நிறுவனம் திவாலானதென்று தொடுத்த கேள்விக்கு; இன்றுவரை சரியான பதிலை மகாதீரால் தர முடிந்ததா? அல்லது அன்றைய மகாதீரின் அந்த ஊழலுக்கு லிம் இன்று விளக்குதான் பிடிக்கிறாரா?

அதோடு மட்டுமா? 1998 நாட்டில் புழக்கத்தில் இருந்து வந்த-1000, 500 ரிங்கிட் நோட்டுளுக்கு மகாதீர்  தடை விதித்தாரே ;அதனுடைய பின்னணி என்ன? அதனால் இன்று வரை நாட்டில் அந்தவகையான நோட்டுகளுக்கு இருந்து வருகிற  தடைக்கு என்னதான் காரணம்?

இன்று வருங்கால பிரதமர் என்று புகழாரம் சூட்டப்படும் அன்வார்தான் 97 வரைக்கும் நிதியமைச்சர்; அந்த நோட்டுக்கடத்தலில், இன்றைய சிலாங்கூர் மந்திரி பெசார் அசிமின் அலியும், அவரின் கூட்டாளியான நிஜாமின் பெயரும் அப்போது அடிப்பட்டது.

அந்த இருவரும் அன்வாரின் நெருங்கிய சகாக்களாகும், இன்றைய நாள்வரை அந்த பல ஆயிரம் கோடி, 1000- 500- நோட்டுக்கான மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமல் இருக்கிறதே ஏன்?

அநத பின்னணிக்கு என்ன காரணம்?, எதுவெல்லாம் வழுவான குற்றச்சாட்டுகள்  ?,யாரெல்லாம் மூட்டைக்கட்டிக்கொண்டு, எந்த நாட்டில் அந்தபணத்தைப் பதுக்கினார்கள் என்ற விபரமெல்லாம், இதுவரைக்கும் மகாதீரும் சொல்லவில்லை, அன்வரும் சொல்லவில்லையே ஏன்?

லிம்மும் அதுபற்றி  வாயைத் திறந்து கேட்கவில்லையே ஏன்? இப்படிப்பட்ட திடீர் கூட்டாளிகளும்,கூட்டணித் தலைவர்களுமா வருங்கால மலேசியாவைக் கட்டிக்காக்கப்போகிறார்கள்?

இவர்களிடமா மக்கள் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வேறு விடுக்கிறார்கள்.

எனவே; அப்படிப்பட்ட மகாதீரரும் எப்படிப்பட்ட அன்வரும், உருப்படியற்ற லிம் கிட் சாங்கும்  இன்றைக்கு சர்வதேச புனிதர்களாகி விட்டானர்? ,இன்னும் நோட்டுக்கடத்தலில் நிகழ்ந்த அந்த மர்ம முடிச்சை அவிழ்க்காதவர்களிடமா , ஆட்சிப்பொறுப்பைத் தர வேண்டும்?

அதேவேளை, மகாதீர் தலைமையில் நாடு மட்டுமா முன்னேறியது? அவரின் மகன் ஜைனி மகாதீரும்  முன்னேறி, இன்றைக்கு மலேசியப் பணக்காரர் பட்டியலில் ஏழாவது இடத்தை  எட்டிப் பிடித்திருக்கிறாரோ அது,எப்படி சாத்தியப்பட்டது.

 

கடந்த இருபது ஆண்டுகளில்,நடந்த அனைத்து இரகசியங்களும் மகாதீர் ஒருவருக்கே வெட்ட வெளிச்சமாகுமல்லவா? 22 ஆண்டுகள் பிரதமராகயிருந்த இவர் காலத்தில்தானே,

ஜைனி மகாதீர் இந்தளவுக்கான உயரத்தை எட்டிப்பிடித்திருக்க முடிந்திருகிறமென்றால் மகாதீரின் எதேச்சதிகாரங்கள் எந்தளவு விண்ணை எட்டிப்பார்த்திருக்க முடியும்? இந்த இடம் மிகவும் கவனிக்கப்பட வேண்டிதானே உள்ளது?

  • அதேபோன்று,இனங்களுக்கிடையே, பொருளாதார இடைவெளியை அதிகமாக்கியதும். இவர் காலத்தில்தானே, அரசாங்கச் சொத்துகளாக, முழு உடைமைகளாகயிருந்தவைகளையெல்லாம்—

குறிப்பாக  தொலைபேசி இலாகாவை டெலிக்கோம் மலேசியாவாக்கியதும், மின்சார இலாகாவை, தெனகா நேசனலாக்கியதும், அஞ்சல் இலாகாவை, போஸ் மலேசியாவாக்கியதும்,இரயிவே இலாகா, கே டிஎம் மாக்கியதும்,

பொதுப்பணி அமைச்சின் கீழ் இருந்த,குடி நீர் இலாகாவை, சபாசா க்கியதும் இவர் காலத்திலேதானே?

.இப்படி , அரசுக்கு சொந்தமான  இலாகாகளையெல்லாம் தனியார் மையமாகி,– அந்த நிறுவன பங்குகளில் 51 சதவீதம் அரசுக்கும், 49 சதவீத  பூமிபுத்தராக்களின் பங்குரிமையாக்கியதும், இந்த மகாதீர்தானே?

பொதுவாக அரசு சொத்துகளோ, அதன் பொதுமைச் சொத்துகளோ எதுவாகயிருந்தாலும், அவை அரசுடைமையிலிருந்து தனியார் மையப் பங்குரிமையாகும் போதும்–

, நாட்டிள்ள எல்லாயின மக்களுக்கும் பங்குரிமைக்கான வாய்ப்பை வெளிச்சந்தையில்,   விழுக்காட்டு அடிப்படையில்   வழங்கியிருக்க வேண்டுமல்லவா?. அத்தகைய  பொது மதிப்பீட்டைக்கூட சரிவர செய்ய எண்ணணிமில்லாத மகாதீரெல்லாம்—

இன்றைக்கு புதிய அரசியல் மறு மதிப்பீட்டுக்குக் களத்தில் இறங்குவதும் மற்றரைப் பார்த்து,  ஊழல்பேர்வழிகள் என்று விமர்சிப்பதும் எந்தவகையில் சாத்தியப்பூர்வமான அரசியல்( அரசு) அணுகு முறையாக இருக்க முடியும்?

  • இவர் காலத்தில்தான் துங்கு முதல் – துன் உசேன் ஓன்,

துன் அப்துல்லா வரையிலான பிரதமர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள்.

அதேபாணியில்தான், துணைப் பிரதமார்களாயிருந்தவர்களான, துன் மூசா ஈத்தாம், துன் கபார் பாபா, டத்தோஸ்ரீ அன்வார் முதல் கணக்கை முடித்து;

 

இன்று; இறுதியில் துணைப்பிரதமாராகயிருந்து வந்த, டான்ஸ்ரீ மொகிதீனை தனது அணியில் சேர்த்துக்காலிப் பண்ணி விட்டார், அடுத்து நடப்பு பிரதமராகயிருந்து வரும் டத்தோஸ்ரீ நஜிப்பை காலிப்பண்ண அவர் மீது பாயத் துவங்கியும் விட்டார்.

இன்றைக்கு; மகாதீர் நஜிப்பை காலிப்பண்ண ,கையில் எடுத்திருக்கும்

ஒரே ஆயுதம் 1MDB மட்டுமே!

இதை மகாதீர் கையில் எடுக்க முக்கிய காரணம்; தனது மகன் டத்தோஸ்ரீ முக்ரீஸ் மகாதீரை எப்படியாவது பிரதமராக்கிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கந்தான்.

எனவே, மகாதீரை பொறுத்தவரை எதிர்க்கட்சிக்கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதைவிட, , நஜிபைப் பதவி விலக வைக்க வேண்டும் என்பதுதான்  முக்கிய நோக்கமாகயிருக்கிறது.

எப்படி, தமது பழித்தீர்க்கும் நோக்கங்களை ;கடந்த காலங்களில் பிரதமர்கள்- துணைப்பிரதமர்கள் சுமத்தி, நிறைவேற்றி அகமகிழ்தாரோ, அதே மகிழ்வை நஜிப்பை காலைவாரி விடுவதின் மூலமாக, அடைய முடியும் என்று எண்ணுகிறார். இதுதான் இன்றைய மகாதீரின் அரசியல் விவூகமாகும்.

அதற்குத் துணைப்போகிற  கெஅடிலான்,ஜசெக,அமானா, போன்றவைக்கு வேறு என்ன பொது நோக்கம் இருந்திடப்போகிறது.

இதில் தோழர் லிம்மையும்,மாட் சாபுவைத் தவிர, மகாதீர், மொகிதீன், அன்வார் போன்றவர்களெல்லாம் அம்னோவின் வழி பிரதமர் முதல்

துணைப்பிரதமர் பதவிவரை இருந்து குத்தாட்டம் போட்டவர்கள்தானே?

இவர்களின் பதவி காலத்தில், இனவாதத்தையும்,மத வாதத்தையும் தவிர வேறு எந்தவகையில் எல்லா மலேசியர்களுக்குமான பேதமற்ற,அடிப்படை  பொதுநோக்கம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது? என்று எண்ணிப்பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறோம்.

அடுத்து ஊழலென்றும், அதை ஒழிக்க வேண்டுமென்றும்  பினாத்தும்

சத்தம் மட்டும் இவர்களிடம் கேட்கலாம், அப்படிப் பார்த்தால்கூட, பதவிக்கு வந்த குறைந்த காலத்திலேயே, அதுவும் மாநில முதல்வர், மந்திரி பெசார் என்றளவிலே, அஸ்மினும், குவாங் எங்கும் எதிர் நோக்காத ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதுமில்லையா?

இவர்கள் என்ன; ஊழலுக்கு எதிரான தீர்க்கத்தரிசுகளா? மக்களும் செய்தி ஊடகங்களும் இவர்கள் மீது முன் வைக்கின்ற குற்றச்சாட்டுகள்; நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதானே வருகிறது?

அதனாலே ஊழல் ஒழிக்கப்படவேண்டியதொன்றென்று  கருதவேண்டியதாகயிருந்தாலும், அரசு பொறுப்பிலும், ஆட்சிப்பொறுப்பிலும் யார் முன்னிலை வகித்தாலும்—

அவர்கள் மீது, உண்மையாகவோ,  பொய்யாகவோ, அல்லது காழ்ப்புணச்சியாகவோ முன்வைக்கப்படும்  ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து யாராவது தப்பிக்கத்தான் முடிகிறதா?

அதனால், அரசியல், அதையொட்டிய ஆட்சிக்களம் எதுவானாலும் மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டியது அவசியமென்றாலும்

அந்த நம்பிக்கையைப்பெறுவதற்கு திடமான ஆட்சி முறையும் மக்களுக்குத் தேவைப்படுகிறது.

வலுவற்ற ஆட்சி முறையானது, மிக குறைந்த பெரும்பான்மையால் நிலை நிறுத்த முடியாது, அதோடுமட்டுமல்ல, தேர்தலுக்காகவும், சிலரின் பலி தீர்க்கும் நோக்கத்திற்காகவும் எதேச்சதிகாரத்தை மட்டும் நல்லாட்சித் தத்துவத்திற்கு துணையாகவும் ஏற்க முடியாது.

அதுவும் மகாதீர் போன்ற சர்வாதிகளால் முன்னெடுக்கப்படும் ஒரு தலைமைத்துவம் எந்தவகையிலும் நல்லாட்சிக்கோ, மக்களின் நல்வாழ்வுக்கோ பயன்பட போவதில்லை,நிரந்தரமாகப் பயணிக்கவும் போவதில்லை.

அதனால், ஹராப்பான் கூட்டணியால் நாடும் முன்னேறாது மக்களும் முன்னேறிட முடியாது என்பதாலே,  “மக்களுக்கான கூட்டணி,நல்ல கூட்டணியுடன் மக்கள்” என்ற உண்மையான அரசியல் தத்துவத்துடன்

60 ஆண்டுகளுக்குமேல் செயல்பட்டுவரும் பாரிசானையே மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.

ஆட்சியின் போது தவறுகள் நடந்தால் திருத்தவும், திரும்ப நடக்காமலும் பார்த்துக்கொள்ளவும் வேண்டிய பொறுப்பு மக்களுக்குண்டு, “மக்கள் குரல் மகேசன் குரல்” என்ற பொது நோக்கத்துடன் பயணப்பட்டுள்ள—

இன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் பின் துன் ரசாக் தலைமையிலான

ஆட்சியே நல்லாட்சியாக இருக்க முடியும் .அதனால் பாரிசானையே தங்களுக்குரிய தேர்வாக தீர்மானிக்கவும்,

தரசு சின்னததில் வாக்களிக்க வேண்டியது அவசியமாகும். அதனால் மேற்கண்ட ஐந்து வலுவான காரணங்களை மிகவும் கவனமாக தேர்தலில் சீர்தூக்கிப்பார்க்க வேண்டுமென்று

கேட்டுக்கொள்கிறோம்.

 

நல்லாட்சியே மக்களுக்கானது

அதுவே,மகிழ்ச்சியோடு சிறப்பானது!

 

உங்கள் சாணக்கியனின்

இதுவொரு,தேர்தல் அலசல்!

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here