பாரிசான் 170 தொகுதிகளை தன்வசமாக்கிக்கொள்ளும்!

0
168

எதிர்க்கட்சிக்கூட்டணியின்

பிரதமர் வேட்பாளர் மகாதீரானால்

52 தொகுதிகளை  கைப்பற்றலாம்!

 

பாரிசான் 170 தொகுதிகளை

தன்வசமாக்கிக்கொள்ளும்!

 

14 வது தேர்தலுக்குப்பிறகும், ஆட்சியில்

தேசிய முன்னணியே தொடரும்!

 

 

எதிர்க்கட்சிக் கூட்டணியான ஹராப்பான் தனது கூட்டணியில் உள்ள கட்சிகளான பெர்சத்து பெர்பூமிக்கு-52-  தொகுதிகளையும்,பிகேஆருக்கு-51- தொகுதிகளையும், அமானாவுக்கு-27- தொகுதிகளையும்,ஜசெகவுக்கு-35-தொகுதிகளையும், மேற்கு மலேசியாவை குறிவைத்து தொகுதிகளை ஒதுக்கி , களத்தில் குதிக்க பங்கீட்டுச்  செய்திருக்கிறது.

 

இந்த ஒதுக்கீட்டில் ஜசெகவுக்கு உடன்பாடு இல்லையென்றே அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த முறை அந்த கட்சி ,குறைந்தது  65 இடங்களில் போட்டியிடத் திட்டம் வகுத்திருந்தது . அந்த திட்டத்தைத் தவிர்த்து விட்டு , ஆட்சி அமைந்தால் செனட்டர் பதவிகளும், சில முக்கிய அமைச்சர் பதவிகளுக்குமான பேரத்தில் தலை கவிழ்ந்து போனது.

அதனால் ஜசெக, தொகுதி பங்கீட்டு விசயத்தில்  பெருமளவு சமரசம் செய்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தொகுதி நிலவரம் இந்தளவுக்குத்தான் இருக்குமென்றால் அந்த கட்சியிலுள்ள சீன வேட்பாளர்கள் கனிசமான அளவுக்கு  போட்டியை எதிர் நோக்க வாய்ப்பு இருக்கிறது.

 

அதில் இந்தியர்களைப் பொறுத்தவரை, குலசேகரன், சிவக்குமார், கஸ்தூரிபட்டு,கோவிந்சிங் ,ராம்சிங், மனோகரன்அல்லது சிவநேசன் என்றளவிலேயே வேட்பாளர் வரிசை இருக்கலாம்.

 

கணபதிராவ்,வசந்தகுமார்,இராமகிஷ்ணன்,போன்றவர்களை இந்த முறை கழட்டி விட்டாலும் ஆச்சரியப்படுவற்கில்லை. எனவே 35 தொகுதிக்குள்ளே தனது அரசியல் சுழற்சியை முன்னெடுக்க ஜசெக உண்மையில் விரும்புமேயானால் –

 

அதுவொரு  கேள்விக்குறிதான். இந்த 35 தொகுதிகளில் எத்தனைத் தொகுதிகளை  இந்தமுறை அது;தக்க வைத்துக்கொள்ளும் 20-25 என்ற எண்ணிக்கைக்குள்ளேதான் இருக்குமென்று தெரிகிறது.

 

அடுத்து;துன் மகாதீரால் திடீரென்று உருவெடுத்த பெர்பூமிக்கு 52 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிப்பதைப் பார்த்தால் அவரே பிரதமர் வேட்பாளர் என்பது உறுதியாகிவிட்டாலும்-

 

அந்த கட்சி, இந்ததேர்தலில்தான்களம்இறக்கப்படுவதால்,

மொத்தமுள்ள(222) தொகுதிகளில் நான்கில் ஒரு பகுதியை  பங்கிட்டுக்கொண்டிருப்பதால்,அதற்கான வெற்றி வாய்ப்பை கவனமாக கவனிக்க வேண்டியுள்ளது.

 

ஆட்சி அதிகாரம் எந்தவகையிலும் தனது பிடியிலிருந்து  நகர்ந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில்தான் தனது கட்சிக்கான ஒதுக்கீட்டை மகாதீர்  52 உயர்த்தியுள்ளார். ஆனால்,இந்த தேர்தல் அவர் நினைப்பது போல,வெற்றிக்குரிய களத்தில் இல்லை.

 

களத்தில் பெர்பூமி,புதிய கட்சியாகும்,சின்னமும் புதிதாகும், அதனால் பெருமளவு பின்னடைவுக்குரிய வழி தடத்திலேயே பெர்பூமியின் நிலைபாடு அமையும்.

 

குறிப்பாக அம்னோ வேட்பாளர்களை நோக்கியே; அக்கட்சியின் கள நிலவரம் இருக்குமென்பதால எந்தளவுக்கு தகுதி வாய்ந்த, செல்வாக்குமிக்க  வேட்பாளர்களை அம்னோவுக்கு எதிராக நிறுத்த முடியும்?

 

எனவே அம்னோவுக்கு மாற்று பெர்பூமி என்றளவிலான முடிவுக்கு மலாய்க்காரர்கள் வருவார்களா?அப்படியொரு திடீர் மாற்றம்; வரும் தேர்தலில் நிகழ்த்த சாத்தியப்படுமா?அதனால் பெர்பூமிக்கு  ஒதுக்கப்பட்டுள்ள 52 தொகுதிகளில்10 தொகுதிகளில் கூட அது;வெற்றிபெற சாத்தியமில்லையென்றே தெரிகிறது.

 

அதேவேளை அந்த கட்சிக்கு மகாதீரே தலைமையேற்பதும் மற்றொரு பின்னடவுக்கு காரணமாகும்.ஏற்கனவே  22 ஆண்டுகள் அவர் பிரதமராகயிருந்திருப்பாதாலும் ,இன்று ,நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் அவரே காரணமானவர் என்பதாலும்,

 

அப்படிப்பட்ட அவரையே பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதாலும், எதிர்க்கட்சிக்கூட்டணியானது(ஹராப்பான்) மிகவும் பலவீனமாகியுள்ளதாகவே தெரிகிறது.அதனால் பெர்பூமிக்கான கணிசமான தொகுதிகளில் பலமான அடியை எதிர்நோக்கும் போது; ஒட்டுமொத்த கூட்டணியே கலகலத்துப்போகும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

 

அடுத்து ;கெஅடிலானுக்கு ஒதுக்கப்பட்ட 51 தொகுதிகளில்,அக்கட்சி 15/18 தொகுதிகளில் வெற்றிப்பெற சாத்தியமுண்டு,13 வது பொதுத்தேர்தலில் , பாஸ் கட்சியின் ஆதரவுடன் வென்ற பல தொகுதிகளை இம்முறை; அது இழக்க வேண்டிவரும். அதேவேளை சிவராசா மணிவண்ணன்

,சுரேந்திரன் போன்றவர்களுக்கு மீண்டும் தொகுதிகள் வழங்கப்பட்டாலும்,கட்சியிலே உள்ள சிலர் ;அந்த தொகுதிகளை தங்களுக்கு கேட்டு, குடுமிபிடி சண்டையை நடத்தவும் செய்கினன்றனர்.

 

இருப்பினும் பெருமளவு மலாய் வாக்காளர்களை நம்பியே அதனுடைய தேர்தல் களமும் அமையும் என்பதால் , டத்தோஸ்ரீ அன்வாரின் தற்போதைய சிறைவாசம் எந்தளவுக்கு மலாய் வாக்குகளை திரட்டுவதற்கு கைக்கொடுக்கும் என்பது கேள்விக்குறியே?

 

எனவே; கடந்த கால தேர்தல்களில் அன்வாரை சிறைக்கு அனுப்பிய மகாதீரே , இந்த தேர்தலில் அன்வார் பக்கம் சாய்ந்திருப்பதால்,

அன்வாருக்கும் மகாதீருக்குமான நம்பகத்தன்மை ஒரு கேள்விக்

குரியாகியுள்ளது. எனவே அரசியல் ஆதாயத்தைக் கருதுகிற இருவரிடம் மக்கள்   வசமாகமுடியுமா? என்பதே பலமான கேள்வியாகியுள்ளது.

 

அடுத்து; அமானாவின் நிலைபாடும் தேர்தலில் எப்படியிருக்கும் என்பது யோசிக்க வேண்டியுள்ளது. பாசுக்கு மாற்று அமானாவாகயிருக்க முடியுமா?

 

70 ஆண்டுகால பாசுக்கு; நேற்று முளைத்த அமானா சரிநிகராக எழ முடியுமா? மலாய் வாக்காளர்களிடையே, அதுவும் குறிப்பாக மதவாதங்களில் மூழ்கிப்போனவர்களிடையே தனக்கான வாக்குகளை மீட்க அமானாவால் முடியுமா?

 

இந்த கேள்விக்கான பதிலைச்சொல்லுவதிலேயே தடுமாற்றத்தில் இருக்கும் அக்கட்சிக்கு-24 தொகுதிகள் வழங்கப்பட்டிருப்பதானது அதிகமே! 24 -ல் 2 தொகுதிகளை அக்கட்சி மீட்டெடுத்தாலே பெரிய விசயமாகும்.

 

அதேவேளை இக்கட்சி போட்டியிடும் எல்லாத் தொகுதிகளிலும் கண்டிப்பாக மும்முனை போட்டியைச் சந்திக்க வேண்டிவரும் . மும்முனை போட்டியென்றாலே அது பாரிசானுக்கான வெற்றியாகத்தான் அமைய முடியும்!

எனவே ஹராப்பான் முதல் கட்டமாக மேற்கு மலேசியாவில்  போட்டியிட உறுப்புக்கட்சிகளுக்கு ஒதுக்கியிருக்கிற 165 தொகுதிகளில்,

பெர்பூமிக்கு—10

ஜசெகவுக்கு—20

அடிலானுக்கு-15

அமனாவுக்கு—02

ஆகமொத்தம்—47 தொகுதிகளை வென்றெடுக்க சாத்தியமுண்டு

அதேவேளை சபா- சரவாக்கில் மொத்தமாக 5 தொகுதிகளை வென்றெடுக்க சாத்தியமுண்டென்று கருதினாலும் 52 தொகுதிகளுக்கு மேல் வெற்றிக்கொள்ளசாத்தியம் இருப்பதாகத்தெரியவில்லை.

எனவே மொத்தமுள்ள 222 தொகுதிகளில் பாரிசான்  170 தொகுதிகளை தன்வசப்படுத்திக்கொள்ள சாத்தியம் உண்டென்றே களநிலவரங்கள் துல்லியமாகத் தெரிவிக்கின்றன.

இந்த அடிப்படையிலேயே திசைகள் தொலைக்காட்சியும் கடந்தாண்டு, நவம்பரில் எல்லா மாநிலங்களிலும்  நடத்திய களயாய்விலும் 165-170 க்கும் இடைப்பட்ட நிலையிலே பாரிசான் தனது வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் என்று குறிப்பிட்டிருந்தோம்.

 

களத்திலிருந்து

திசைகளுக்காக

உங்கள்- சாணக்கியன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here