பாஸ்: கருத்துகள், ஆலோசனைகள், விமர்சனங்களை முதலில் கட்சியிடம் முன்வைக்க வேண்டும்!

0
42

கோலாலம்பூர்: கட்சி விவகாரங்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு விவகாரத்தையும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியில் கொண்டு வந்து, விவாதிக்கவும், கலந்துரையாடவும் கட்சி உறுப்பினர்களுக்கு இனி அனுமதி இல்லை என பாஸ் கட்சி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

எந்தவொரு கருத்துகள், விமர்சனங்கள், ஆலோசனைகளும், கட்சிக்குள் இயங்கும் முறையான குழுவிடம் முதலில் தெரிவிக்க வேண்டும் என அக்கட்சியின் தலைமை பொதுச்செயலாளர் தக்கியூட்டின் ஹசான் கூறினார்.

இத்தடையானது உடனடியாக அமல்படுத்தப்படுகிறது என தக்கியூட்டின் கூறினார்.

கட்சியின் நலன் மீது சேதத்தை ஏற்படுத்த நினைக்கும் எந்த ஒரு கட்சி உறுப்பினரின் நடவடிக்கையையும் கட்சி அனுமதிக்காது என அவர் கூறினார்.

தடையை மீறும் உறுப்பினர்கள், கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவினை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் கூறினார்.

selliyal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here