தயாரிப்பாளர் அர்ச்சனா பிகில் படத்தின் டிரைலர் வெளியிடும் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி விஜய் நடிப்பில் ஏ.ஆர். ரகுமான் இசையில் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவரவுள்ள பிகில் படத்தின் மிரட்டலான டிரைலர் வரும் சனிக்கிழமை (அக்டோபர் 12) மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.