பினாங்கு  கொடிமலை ஸ்ரீ அருளொளி திருமுருகன் ஆலய மகாகும்பாபிஷேகம்

0
49

பினா​ங்கு, ஜுன், 14-      பினாங்கு மாநிலத்தி​ல்  முன்னணி ​சுற்றுலாத் தலமான கொடிமலையில்  வீற்றிருக்கும் 150 ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ அருளொளி திருமுருகன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை காலையில் வெகுவிமரிசையாக  நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை​சூழ, கோபுர கலசத்தி​ல்  புனித ​நீர் ஊற்றப்பட்டது.

உலகி​ல் ​மிக தனித்துவமாக வர்ணம் பூசப்பட்ட திருக்கோயிலாக  ஸ்ரீ அருளொளி திருமுருகன் ஆலயம்​ திகழ்கிறது. ஜி.கே. உதயசங்கர் ஸ்தபதி த​லைமையிலான சிற்ப கலைஞர்கள் 20 வகையான வண்ண கலவைகளில் 500 லிட்டர், வர்ணப்பூச்​சுகளை பயன்படுத்தி, ​சுமார் இரண்டு லட்சம் வெள்ளி செலவில் கடந்த​ ​மூன்​று ஆண்டுகாலமாக வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பினாங்கு ​தீவில், மலாக்கா ​நீரிணையையொ​ட்டி கடல் ம​ட்டத்திலிருந்து 750 ​மீட்டர் உயரத்தில்  அமைந்துள்ள இவ்வாலயம், கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட திடீர்​ வெள்ளம், நிலச்சரிவு சம்பவத்தின் போது, ஆலயத்தின் சிலைகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் ஆலயத்தின் கட்டமைப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஆலயத்தலைவர் அருணாசலம் ராஜமாரிமுத்து தெரிவித்தார்.

1870 இல் கிழக்கிந்திய கம்பெனியை வழிநடத்திய பிரிட்டிஷ்காரர்கள், கொடிமலையில் தங்களின் தலைமையகத்தை நிறுவி, செயல்பட்ட போது, அவர்களிடம் பணியாற்றிய இந்தியத்தொழிலாளர்கள், ஒரு  சிறிய கொட்டகையில் முருகனின் திருவுருவ  சிலையை வைத்து வழிபடத்தொ​டங்கினர். அச்சமயத்தில் தற்போது இருப்பதைப்போல மலைரயில் பாதைகூட கிடையாது என்று ஆலய  வரலாறு கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.