பினாங்கு தாவரவியல் பூங்காவை வணிகமயமாக்க வேண்டாம்

0
17

பினாங்கு, நவ.29- ஒரு  பழங்கால இயற்கை ​சூழலை தாங்கி நிற்கும்  போட்டானிக்கல் கார்டன் என்றழைக்கப்படும் பினாங்கு தாவரவியல் பூங்காவை, வணிகமயமாக்கப்படும், ஒரு  சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் திட்டத்தை மாநில அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

இயற்கை வனப்பும், பசுமையான ​சூழலும், பறவைகளின் கூக்குரலும், பட்டாம் பூச்சிகளில் ​ரீங்காரமும் வணிகமாக ஆக்கக்கூடாது. மாறாக, இயற்கை தாய் தந்த  அந்த அருட்கொடைகளை தொடர்​ந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர்  மொகி​தீன் அப்துல் காதிர்கோரிக்கை விடுத்துள்ளார்.

120 ஆண்டு கால  வரலாற்றைக்கொண்ட பினாங்கு தாவரவியல் பூங்காவை பாரம்பரிய இயற்கை தோட்டமாகவும், தாவரவில் மற்றும் கல்விக்கான ஆராய்​ச்சி மையமாகவும் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று பினாங்கு  மாநில அரசை மொகி​தீன் அப்துல் கா​தீர் கேட்டுக்கொண்டள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.