பிரதமர் பதவிக்கு துன் மகாதீரை முன் நிறுத்தினால்தான் அவரிடமிருந்து தேர்தல் செலவுக்கு ஒரு பில்லியன்(1000 மில்லியன்) கணக்கில் வரும்.

0
395

எதிர்க்கட்சி கூட்டணியில், அதாவது ஹராப்பான் கூடாரத்திலே

பிரதமர் பதவிக்கு துன் மகாதீரை முன் நிறுத்தினால்தான் அவரிடமிருந்து தேர்தல் செலவுக்கு ஒரு பில்லியன்(1000 மில்லியன்)  கணக்கில் வருமென்றும் அவரை நிறுத்தாமல் வேறு யாரையும் நிறுத்தினால் அவரிடமிருந்து பணம் வராது என்றும் திட்டவட்டமாக முன்னாள் துணைப்பிரதமரை வைத்து ;ஒரே போடாய் போட வைத்தாராம் மகாதீர்.

இந்த அதிரடி தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஜசெக கூடாரமும், கெ அடிலான் கூடாரமும் பெருமளவு ஆட்டங்

கண்டுள்ளதாம்.கடந்த காலங்களில் பாரிசான் வழி பல பொதுத்தேர்தல்களில் களம் கண்டுள்ள மகாதீருக்கு

தேர்தல் வெற்றிக்கு; பணம் மிகவும் பிரதானமானது என்ற உண்மையை

நன்கு தெரிந்து வைத்திருப்பவர் என்பதால், அவரே வரும் தேர்தலை முன்நிறுத்தி நடத்துவதால் ஒரு பில்லியனுக்கான பணம் அவசியம்;   என்று அந்த முன்னாள் துணைப்பிரதமர், தனி தனியாக

கெ அடிலான்,ஜசெக கூடாரங்களில் எடுத்து வைத்த வாதம் படுபயங்கரமான அதிர்ச்சி அலையை அக்கட்சிக் கூடாரங்களில் ஏற்படுத்தியுள்ளது.

ஜசெகவின் நிலைபாடோ; எந்த சிக்கலின்றியும், பெரும் விமர்னத்திலும்

சிக்காத ஒருவர் பிரதமர் வேட்பாளராகயிருப்பது அவசியமென்றும்  குறிப்பாக பிரதமர் வேட்பாளராக மகாதீரை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லதென்றும் கருதுகிறது. அதற்கு அடிப்படைக் காரணம், மகாதீரின் முகத்தைக்காட்டினால் கணிசமான சீன வாக்காளர்களின் ஆதரவை இழக்க வேண்டி வரும்,அதேபோன்று இந்திய வாக்குகளும் பெருமளவு சிதறும் என்று களநிலவரம் தெரிவிப்பதாக கருதுகிறது. இதே கருத்தில் கெ அடிலானும் உடன்பட்டிருக்கிறது என்றே தெரிகிறது

ஜசெகவைப்பொறுத்தவரை பிரதான எதிர்க்கட்சியாகயிருப்பதும் நாடாளுமன்றத்தில் தனது நிலைபாட்டை வெளிப்படுத்துமாகவே இதுவரை காலத்தைக் கழித்து வந்துள்ளது. இந்த முறை,அக்கட்சி ஆட்சியில் பங்களிப்பு என்று நினைக்கத் துவங்கியுள்ளது. கெஅடிலானை

பொறுத்தவரை அன்வாரை முன்னிறுத்தி பிரதமர் கனவை 2001லிருந்து சுமந்து வந்துள்ளது.

இதற்கிடையில் இடையிலே வந்து நுழைந்த  மகாதீர் பிரதமராக நினைப்பதும், அதற்கான தகுதி தனக்கு மட்டுமே இருப்பதாகக் கருதுவதும், அந்த பதவியை எட்டிப்பிடிக்க அதற்கான பண பலத்தை முன்னிறுத்துவதும்  அம்னோவுக்கு மாற்றாக பெர்பூமியை மட்டும் முன்னெடுப்பதுமான நடவடிக்கை  கெஅடிலானின் துணைத்தலைவரான டத்தோ அஸ்மின் அலியின் தரப்பு முற்றிலும் விரும்பவில்லையென்றே தெரிகிறது.

இதற்கிடையில் இவரின் வில்லன் வேடத்தை டத்தீன்ஸ்ரீ வான் அஜிசா முழுமையாக அறிந்திருப்பதாலே, அன்வாருக்கு அடுத்து,அஜிமின் அலி, என்ற வாதத்தைக் கடுமையாக எதிர்த்து வருகிறார். அதனாலே பிரதமர் பதவி மகாதீர் வசமானாலும்,  எந்த வகையிலும் அஜிமின் பக்கம் அது, திரும்பி விடக்கூடாது என்பதிலேயும், அதேவேளை துணைப்பிரதமர் பதவி தனக்கோ, தனது மகள் நூருலுக்கோ வந்து சேர வேண்டும் என்று உறுதியாக ஒரு கணக்கைப்போட்டுள்ளார்.என்றே தெரிகிறது.

இந்த கணக்கிலே ஜசெக ஒரு வியூகம் வகுத்து இருக்கிறது,

அந்த வியூகம் என்னவென்றால், எப்படிப்பார்த்தாலும், வரும் தேர்தலில் நாடாளுமன்றத்தொகுதிகள், ஜசெக பக்கமே அதிகமாக சரியுமாம்,அப்படியொரு நிலை அமையுமேயானால்

வெற்றிக்குப்பிறகு,அதிக எம்பிக்கள் சீட்டை முன்னிறுத்தி, தனது கட்சியிலே இருக்கிற மலாய்க்காரரைக்காட்டி, பிரதமர் பதவியை

மீட்க முடியும் என்று ஒரு அந்தரங்கத் திட்டம் ஒன்றைப் போட்டுள்ளது.. இதுபோன்ற இடைச்செருகலான அதிரடி அரசியல், கிட் சாங்கிற்கு அத்துப்படி என்பதாலே; தேர்தலுக்குப்பிறகு தனது முகமூடியை ஜசெக கழட்ட நினைத்துள்ளது என்றே தெரிகிறது..

இந்த கணக்கும் சூழ்ச்சியையும் மகாதீரும் அவரின் பெர்பூமியினரும்

அறிந்து இருப்பதாலேயே, தனது பண பலத்தையும், அதேவேளை

தனது முன்னாள் பிரதமர் என்றளவிலான அதிகாரப்பலத்தையும் முன்னிறுத்தி ,பிரதமர்  வேட்பாளர் என்ற தகுதியை முன் கூட்டியே மீட்டெடுத்துள்ளார்.

அதற்கு அவர் முன் வைப்பது பண அரசியலாகும். எனவே தனது எண்ணமும் செயலும் வெற்றிப்பெறுவதை யார் தடுக்க நினைத்தாலும் அல்லது,முரண்டுப்பிடித்தாலும்,அவர்களின் தலையிலே நடந்தாவது தனக்கான பிரதமர் கனவை நிறைவேற்றிக்கொள்ளவே மகாதீர் முனைவார்.என்றே தெரிகிறது.

எனவே ஹராப்பான் கூட்டணி ஆட்சி அமைக்க நினைக்கும் கனவு கனவாகவே இருக்கும் என்றளவில் களநிலவரங்கள் தெரிவித்தாலும்

அந்த கனவுக்குள்ளே, மகாதீரின் பிரதமர் கனவுதான் அதிமுக்கியமாகயிருக்கிறது., அந்த கனவே பல குழப்பங்களுக்கு

காரணமாக தேர்தல் முடிவில் அமையப்போகிறது எனது முதல்கட்ட விசாரணைத்தெரிவிக்கிறது

 

உங்கள்—

007- ஜேம்ஸ்பாண்ட்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.