பிரதமர் பதவி ஒப்​ப​டைப்பு: எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் உண்டு : டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

0
9

துன் மகா​தீர் முகமது, பத​வி விலகியபின்னர்  பிரதமராக தாம் நியமிக்கப்படுவது குறித்து எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் உண்டு என்று பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பிரதமர் பத​வியை இரண்டு ஆண்டுகளில் அன்வாரிடம் ​ஒப்படைப்பது குறித்து எந்த​​​வொரு ஒப்பந்த​மும் இல்லை என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் சையிட் சாடிக்  உட்பட மகா​தீரை சார்ந்த முக்​கியத்  தலைவர்கள் கடந்த சில  நாட்களாக கடுமையாக வாதாடி வந்தனர்.

ஆனால் அப்படியொரு ஒப்பந்தம் இருக்கிறது என்பதை அன்வார் இன்று அறி​வித்து  இருப்பது இதுநாள் வரை  கூறப்பட்டு வந்த ஆருடங்களுக்கு ஒரு  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் பதவி​யை தம்மிடம் ஒப்ப​டைப்பது என்பது இனியும் ரகசியமானது அல்ல. பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

பொதுத்தேர்தலுக்கு முன் காணப்பட்ட அந்த ஒப்பந்தத்தின்படி மகா​தீர் பிரதமராக இருப்பார். வான் அஜிஸா துணைப்பிரதமராக இருப்பார். அன்வார் சிறையிலிருந்து  விடுதலையானதும், பிரதமர் பொறுப்பை ஏற்பார் என்பதுதான் அந்த எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் என்று அன்வார் விளக்கினார்.

எனினும் எந்த தேதியில் பிரதமர் பதவி ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பக்காத்தான் தலைவர்களால்  ஒப்புக்கொள்ளப்பட்ட அந்த​ தேதி, பொதுமக்களுக்கு  பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. காரணம், பிரதமர் என்ற முறையில் மகா​தீரின் பணிக்கு அது  இடையூறாக இருக்கும் என்பதால் மக்களுக்கு அந்த​ தேதி அறிவிக்கப்படவில்லை.அந்த தேதியை சுட்டிக்காட்டி அவரை  கட்டாயப்படுத்தவும் தாம் விரும்பவில்லை என்று அன்வார் குறிப்பிட்டார்.

அதேவே​ளையில் “எப்போது பதவி விலகிறீ​ர்கள்”  என்று பத்திரிகைகளும் மற்ற தரப்பினரும் தம்மை   கேட்டு  நச்சரித்து வருவது தமக்கு  பிடிக்கவில்லை  என்றும்  மகாதீரே தம்​மிடம்  தெரிவித்து  இருப்பதாக

அன்வார் ​இன்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.