பிரிட்டனைச் சேர்ந்த பீட்டில்ஸ் இசைக்குழு புகைப்படங்கள் ஏலத்தில் ரூ.2.32 கோடிக்கு விற்பனை

0
101

பிரிட்டனைச் சேர்ந்த சேர்ந்த பிரபல இசைக்குழுவான பீட்டில்ஸ் இசைக்குழுவினரின் புகைப்படங்கள் ரூ.2.32 கோடிக்கு ஏலம் போயின.

1960-ல் பிரிட்டனின் லிவர்பூலில் தொடங்கப்பட்டது பீட்டில்ஸ் இசைக்குழு. 1960 முதல் 1970 வரை உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்தது இந்த இசைக்குழு. இந்தக் குழுவில் பால் மெக்கார்ட்டினி, ஜான் லெனன், ஜார்ஜ் ஹாரிசன், ரிங் ஸ்டார் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். ராக் வகை இசையில் இவர்கள் பிரபலமாக இருந்தனர். இவர்களுக்கு அண்மையில் சர் பட்டம் வழங்கப்பட்டது.

பீட்டில்ஸ் இசைக்குழுவினர் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன், பால்டிமோர் நகரங்களுக்கு இசைநிகழ்ச்சி நடத்த வந்தபோது மைக் மிட்செல் என்ற புகைப்படக் கலைஞர் புகைப்படங்கள் எடுத்துள்ளார். ஆனால் அந்தப் புகைப்படங்கள் இதுவரை வெளியுலகுக்கு வராதவையாகும்.

இந்த நிலையில் இந்தப் புகைப்படங்களை ஒமேகா ஆக்ஷன்ஸ் நிறுவனம் அண்மையில் ஏலம் விட்டது. மொத்தம் 413 நெகட்டிவ்கள், 350 புகைப்படங்கள் ஆகியவை 2,53,200 பிரிட்டன் பவுண்டுகளுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2.32 கோடி) ஏலம் போயின என்று லண்டனிலிருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 46 புகைப்படங்கள் மட்டுமே வெளியுலகுக்கு தெரிய வந்த புகைப்படங்களாகும்.

மைக் மிட்செல் 18 வயதாக இருந்தபோது அந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளார். இதுகுறித்து மைக் மிட்செல் கூறும்போது, “வாஷிங்டன் கொலிசியத்தில் நடந்த இசைநிகழ்ச்சிக்கு அவர்கள் வந்தபோது இந்த படங்களை எடுத்தேன். அப்போது என்னிடம் இருந்த கேமராவில் பிளாஷ் வசதி கிடையாது. எனவே இயற்கையில் கிடைத்த ஒளியை வைத்து படம் எடுத்தேன்” என்றார்.

புகைப்படங்கள் ஏலத்தில் விடப்பட்டதைத் தொடர்ந்து பீட்டில்ஸ் இசைக்குழு உறுப்பினர் ஹாரிசன் பயன்படுத்திய மெர்சிடிஸ் கார் ஏலத்தில் விடப்பட்டது. இந்த கார் 43,200 (ரூ.39.68 லட்சம்) பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இந்தக் காரை ஹாரிசன் 1984-ல் 85,000 பவுண்டுகளுக்கு வாங்கியிருந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here