பி.எஸ்.எம்.  புதிய தலைவராக ஜெயக்குமார் தேர்வு

0
11
டாக்டர் ஜெயக்குமார் தேவராாஜ்

கோலாலம்பூர், ஜுலை,14- பி.எஸ்.எம்.  எனப்படும் மலேசிய சோஷலிச கட்சியின் புதிய தேசியத் தலைவராக சுங்கை சிப்புட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ்  தேர்வு பெற்றுள்ளார். அதேவேளையில் அக்கட்சியின் புதிய துணைத்தலைவராக எஸ். அருள் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பி.எஸ்.எம். கட்சியின் மூன்று நாள் மாநாடு காஜாங், மெட்ரோ பிரிமாவில்  இன்று ஞாயிற்றுக்கிழமையுடன்  நிறைவுபெற்றது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அக்கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் எம். சரஸ்வதி தோல்விக்கண்டுள்ளார். அக்கட்சியின் முதலாவது தலைவராக கடந்த 20 ஆண்டு காலமாக பொறுப்பேற்று இருந்த டாக்டர் முகமட் நாஸிர் ஹஷிம் பதவி விலகியுள்ளார்.

எஸ்.அருட்செல்வன்

தோட்டத்தொழிலாளர் நலன், அவர்களின் வீட்டுப்பிரச்சினை, புறம்போக்குவாசிகள், விவசாயிகள், மீனவர்கள் உட்பட சாமானியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை முன்னெடுப்பதே பி.எஸ்.எம். கட்சியின் பிரதான பங்களிப்பாக இருக்க வேண்டும் என்று புதிய தலைவர் டாக்டர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here