பீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை

0
136

கோலாலம்பூர், ஏப்ரல் 21- கடந்த 2017ஆம் ஆண்டின் பீர் திருவிழா என்ற நிகழ்ச்சியின் போதுவெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக இரண்டு நபர்களுக்கு இங்குள்ள உயர்நீதிமன்றத்தில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இத்தகைய வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் சாத்தியத்தை அறிந்த போலீசார் இவர்கள்இருவரையும் கைது செய்யாமல் போயிருந்தால், அந்த பீர் விழா நிகழ்ச்சியை அன்றைய தினமேபோலீசார் ரத்து செய்யாமல் போயிருந்தால், என்ன நடந்திருக்கும்? என்று நீதிபதி டத்தோசோஃபியான் அப்துல் ரசாக் கேள்வி எழுப்பினார்.

மேற்கண்ட வகையில் போலீசார் செயல்படாமல் போயிருந்தால், அந்த நாளில், அந்த இடத்தில்வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று நீதிபதி சோஃபியான்சுட்டிக் காட்டினார்.

35 வயதுடைய மஹாடி இப்ராகிம் மற்றும் 26 வயதுடைய அகமட் அஸ்மி ஆகிய இருவருக்கும்14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்புக் கூறினார்.வெடிகுண்டு தயாரிப்பதில்ஈடுபட்டதற்காக மஹாடிக்கும், அவரைப் போலயே பயங்கரவாத நடவடிக்கைகளுக்குஉடந்தையாக இருந்ததாக அகமட் அஸ்மிக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள்இருவருக்கும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருந்ததாக நீதிமன்றத்தில்கூறப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.