புற்று நோயாளிகளுக்கு அரசாங்க மருத்துவமனையில் அதிக கட்டணம் : சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.

0
19

கோலாலம்பூர்- அரசாங்க மருத்துவமனைகளில் புற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு 400 ரிங்கிட் விதிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.

அந்த கட்டணம் ஒரு பெட்டி ‘தாமோஸிபேன்’ மருந்துக்கோ அல்லது ‘லெத்ரோஸோல்’ மருந்துக்கோ விதிக்கப்பட்டிருக்காது. மருந்துகளையும் நான்கு வாரத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் தொடர் சிகிச்சைகளுக்கும் சேர்த்துதான் இருக்குமென சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ டாக்டர் சேன் சாவ் மின் தெரிவித்தார்.

கடந்தாண்டு ஜனவரி 26-ஆம் தேதி சுகாதார அமைச்சின் நிதியியல் பிரிவு வெளியிட்ட கட்டண முறைப்படியே புற்று நோயாளிகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here