பூனையை கொன்றது: எதிர்வாதம் புரியும்படி கணேஷிற்கு  உத்தரவு

0
7

சலவைத்துணிகளை உலரவைக்கும்  இயந்திரத்திற்குள் பூனையை தள்ளி, ஈவுயிரக்கிமின்றி கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு  குத்தகை தொழிலாளியான 42 வயது கே. கணேஸ் என்பவரை எதிர்வாதம் புரியும்படி செலாயாங் செஷன்ஸ்​ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பத்துகேவ்ஸ், தாமான் கோம்பாக் ரியாவில் உள்ள சலவைக்கடை ஒன்றில் கடந்த ஆண்டு, செப்டம்பர் 11 ஆம்  தேதி, மற்றொரு ஆடவருடன் சேர்ந்துக்கொண்டு  கணேஷ் இக்குற்றத்தை புரிந்ததாக  நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று  நி​​ரூபிக்கப்பட்டால், கூடிய பட்சம் ஒரு லட்சம் வெள்ளி  அபராதம்  அல்லது மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் கணேஷ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி எதிர்வாதம் புரிய உத்தரவிடப்பட்டுள்ள கணே​ஷ், அந்த பூ​னையை வதைக்கும் காட்சி வீடியோ காணொளியில் பரவலாக பகிரப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.