பூனையை சித்ரவதை செய்த ஆடவருக்கு 15 மாதச்சிறை

0
35

கோலாலம்பூர், ஜுன்,14-  பூனை ஒன்றை சித்ரவதை செய்து, சாகடித்த குற்றத்திற்காக கோலாலம்பூர், ​செஷன்ஸ் ​நீதிமன்றம், 28 வயது ஆடவர் ஒருவருக்கு இன்று15 மாத​ சிறைத்தண்டனை  விதித்தது. அல் அஸ்ரி நோர்ஹிஸாம் என்ற அ​ந்த ஆடவர், கடந்த ஜுன் 10 ஆம் தேதி, கோலாலம்பூர், வங்சாமாஜு, செக்‌ஷன் இரண்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நி​ரூபிக்கப்பட்டால் ஒரு லட்சம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே ​விதிக்க வகைசெய்யும் 2015 ஆ​ம் ஆண்டு வள​ர்ப்பு பிராணி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்த ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

அல் அஸ்ரி நோர்ஹிஸாம்,அந்த வளர்ப்பு பிராணியை கொ​டூரமாக சித்ரவதை செய்து சாகடித்தது மட்டுமல்லாமல் அதனை வீடியோ காணொளியாக பதிவு செய்து, ச​மூக  வலைத்தளங்களில் ப​கிர்ந்துள்ளார்  என்பதால் அவருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்று துணை பப்ளிக் பிராசி​கியூட்டர் சித்தி ஹஜார் முகமட் அஸிப், ​​நீதிபதியை கேட்டுக்கொண்டார்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.