பூர்வக்குடி மக்களுக்கு கருத்தடை  மாத்திரைகளா ?

0
9

கோலாலம்பூர், ஜுலை, 11-  பூர்வக்குடி பெண்களைக் கருத்தடை செய்துகொள்ளும்படி சுகாதார அமைச்சு அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் செய்தி உண்மையா என்பதைக் கண்டறிய  அரசாங்கம் ஒரு விசாரணைக் குழுவை அமைக்கும் என்று பிரதமர்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

பூர்வக்குடி மக்கள் கூறியுள்ள அந்த குற்றச்சாட்டை படித்து  தாம்“அதிர்ச்சி” அடைந்ததாக வேதமூர்த்தி தெரிவித்தார். சுகாதார அமைச்சின் நடமாடும் மருந்தகங்களில் பணிபுரியும் தாதியர்கள் கருத்தடை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தன் இன பெண்களை மிரட்டுவதாக “தெமியார்” பூர்வக்குடியினரின் உரிமைகளுக்காக போராடி வரும் நோரா கண்டின் என்பவர் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

பூர்வக்குடி சமூகத்திற்கு குடும்பக்கட்டுப்பாடு மருந்து, மாத்திரைகள் கொடுக்கும்  நடவடிக்கையை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு பேரா கிரிக்,  கெடா சுங்கைப்பட்டாணியை சேர்ந்த ஐந்து பூர்வக்குடி கிராமங்களை சேர்ந்தவர்கள் கடந்த செவ்வாயக்கிழமை அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அன்றைய தினம் காலையில் நாடாளுமன்ற வளாகத்தில் தங்களின் பாரம்ரிய ஆடை, அணிகளுடன் குழுமிய  அவர்கள்,  அந்த மருந்து, மாத்திரைகளின் உள்ளடகத்தை தெளிவாக கூறவில்லை என்ற போதிலும் அந்த மாத்திரைகள் தங்களுக்கு தேவையில்லை என்று குறிப்பிட்டனர்.
ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு செல்லும் போது, அந்த மாத்திரைகள் கொடுக்கப்படுவதாகவும் இவ்வாறு கொடுக்கப்படுவதை சுகாதார அமைச்சு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். குழந்தைகள் பெற்றுக்கொள்வதை இந்த மாத்திரைகள் தடுத்து நிறுத்தும் என்றுகூறி மாத்திரைகள் கொடுக்கப்படுவதாக தெரிவித்த அவர்கள், தாங்கள் குழந்தைகள் பெற்றக்கொள்ளாமல் இருப்பதை விரும்பவில்லை  என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here