பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திரலேகா சந்தித்தது RTI யில் தெரிந்தது

0
36

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா சசிகலாவை சந்தித்ததாக தகவல் வெளியானது. இதனை இரு தரப்பினரும் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி கடந்த மே மாதத் தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை சிறையில் சசிகலாவை எத்தனை பார்வையாளர்கள் சந்தித்து பேசினர், எத்தனை மணி நேரம் சந்திப்பு நிகழ்ந்தது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

அதில், “கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை சசிகலாவை 36 பார்வையாளர்கள் சந்தித்து பேசி யுள்ளனர். அதில் அதிகபட்சமாக சசிகலாவின் உறவினரும், அமமுக துணைப் பொதுச்செயலாளரு மான டிடிவி தினகரன் 7 முறை சந்தித்துள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் சசிகலாவின் உறவினர் கள் ராமசந்திரன் 6 முறையும், கமலா 5 முறையும், சிவகுமார் 4 முறையும் சந்தித்து பேசியுள்ளனர்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா ஆகஸ்ட் 20-ம் தேதி சசிகலாவை ”நண்பர்” என்ற உறவு முறையில் சந்தித்துள்ளார். பகல் 1 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு 1.45 வரை நீடித்துள்ளது ” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.