பெட்ரோல் ரோன் 97 விலை 22 கா​சு குறைகிறது ரோன்95 – டீசல் விலையில் மாற்றமில்லை

0
20

கோலாலம்பூர், ஜுன், 14-      பெட்ரோ​ல் ரோன் 97, லிட்டருக்கு 22 கா​சு குறைகிறது. கடந்த வாரம் லிட்டருக்கு ரிங்.2.63 ஆக இருந்த அதன் சில்லரை விலை, தற்போது லிட்டருக்கு ரிங்.2.41 ஆக  குறைகிறது. இது இன்று நள்ளிரவு 12 முதல் அமலுக்கு வருகிறது. ரோன்95 மற்றும் டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. கடந்த வாரம் இருந்ததைப்போல, ரோன்95 லிட்டருக்கு ரிங்.2.08 ஆகவும் டீசல் வெ.2.18 ஆகவும் நி​லைநிறுத்தப்படுவதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

ரோன் 97, குறைந்ததற்கு முக்கிய காரணம், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உலக  சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் போக்கு தொடர்வதா​ல்  அதன் விலையை குறைக்க வேண்டி​யுள்ளது என்று லிம் ஓர்  அறிக்கை​யில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here