“பெண்களுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படும்” பா.ஜனதாவின் அறிக்கையை கிண்டல் செய்யும் அரசியல் கட்சிகள்

0
64
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜனதா நேற்று வெளியிட்டது. பா.ஜனதா வெளியிட்டதும் அதில் பெண்களுக்கான சிறப்பு அம்சங்கள் பகுதியில் இருந்த தவறை சுட்டிக்காட்டி காங்கிரஸ், ஆம் ஆத்மி விமர்சனம், கிண்டலை தொடங்கிவிட்டன. பா.ஜனதாவின் உண்மையான நோக்கம் வெளிப்பட்டது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் பிரிவில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. அதில் உள்துறை அமைச்சகத்தில் பெண்கள் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்படும். “கடினமான சட்டத்தின் மூலம் பெண்களுக்கு  எதிராக குற்றம் இழைக்கப்படும்”. பாலியல் பலாத்கார சம்பவங்களில் குறிப்பிட்ட காலங்களில் குற்றவிசாரணை முடிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதில்  “கடினமான சட்டத்தின் மூலம் பெண்களுக்கு  எதிராக குற்றம் இழைக்கப்படும்” என்ற வார்த்தையை வைத்து அரசியல் கட்சிகள் விமர்சனங்களை தொடங்கியுள்ளன.
காங்கிரஸ் இந்த புகைப்படத்தை டுவிட் செய்து. பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை ஒரு விஷயத்தில் உண்மையான நோக்கத்தை வெளிக்காட்டுகிறது. பா.ஜனதாவின் போலியான தேர்தல் அறிக்கை என தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி தன்னுடைய டுவிட்டரில், பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு எதிராக குற்றம் செய்வதை ஊக்குவிக்கிறது. எப்படினாலும் பா.ஜனதா இதற்காக முயற்சிக்கும். உங்களின் உண்மையான நோக்கம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என தெரிவித்துள்ளது. இதுபோன்று டுவிட்டர்வாசிகளும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here