பெண் போராளிகளின் உறுப்புகளில் சுடுங்கள்: பிலிப்பைன்ஸ் அதிபர் பேச்சால் சர்ச்சை

0
251

அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் பெண் போராளிகளின் பிறப்புறுப்புகளில் சுடுங்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

பிலிபைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி  பிலிப்பைன்ஸில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது, “எங்கள் ராணுவ வீரர்கள் உங்களைக் கொல்லப் போவதில்லை.

 நாங்கள் உங்கள் பிறப்புறுப்புகளில் துப்பாக்கிக் குண்டுகளால் சுடுவோம். அதன்பிறகு நீங்கள் பயனற்றுப் போவீர்கள்” என்று கூறினார்.

டியூடெர்டின் இப்பேச்சுக்கு  மனித உரிமை மற்றும் மகளிர் அமைப்புகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பெண் போராளிகள் குறித்த டியூடெர்டின் இக்கருத்துக்கு பிலிப்பைன்ஸின் மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறும்போது, “டியூடெர்ட் பாலியல் துன்புறுத்தல்களை ஊக்குவிக்கிறார். இது சர்வதேச மனித உரிமை சட்டத்தை  மீறுவதாகும்”என்றார்.

டியுடெர்ட் பிலிப்பைன்ஸின் அதிபராக கடந்த 2016 ஆண்டு பதவி ஏற்றது முதல் இதுவரை குற்றவாளிகள் என 5,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

டியுடெர்டின் இந்தச் செயலுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்கா போன்ற உலக நாடுகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தன. இருப்பினும் அதற்கெல்லாம் சற்றும் செவி சாய்க்காமல் குற்றவாளிகளுக்கு எதிரான மிகக் கடுமையான தண்டனைகளை டியுடெர்ட் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here