‘பெர்சத்து கட்சி: கிட் சியாங் போட்ட திட்டம்

0
51

பெண்டாங், ஜூலை 13- பாரிசான் கட்சியின் ஆலோசகர் வாரியத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று  பெண்டாங்கில் நடைபெற்ற அம்னோ மத்திய செயலவைக் கூட்டத்தில் பேசிய போது ஜசெக கட்சி ஆலோசகர் லிம் கிட் சியாங்கை சாடி உள்ளார்.

பெர்சத்து கட்சி உருவாக்கப் பின்னனியில் இருந்தவர் கிட் சியாங் என்றும் அந்தக் கட்சியை தோற்றுவிக்க திட்டம் கொடுத்தது கிட் சியாங் தான் என மேடையில்  நஜீப் கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், “பெர்சத்து தோற்றுவிப்பதற்கு முன்பு மகாதீர் மற்றும் கிட் சியாங் சந்திப்புக் கூட்டத்தில் பெர்சத்து பற்றி விவாதிக்கப்பட்டது  என்பது உண்மையே. அம்னோ மற்றும்  மலாய்காரர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தவும் கடந்த  பொதுத் தேர்தலின் போது வாக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும் பெர்சத்து கட்சி ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது. நான் இதுவரை பெர்சத்து கட்சியின் வரலாற்றைப் பற்றி பேசியது இல்லை. ஆனால் இனி அதன் பின்னனியில் இருந்து இயக்கி வருபவர்களை அடையாளப்படுத்துவேன்”  என நஜீப் கூறினார்.

மலாய்க்காரர்களின் ஒற்றுமையும் பலத்தையும் மேம்படச் செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பாஸ்சோடு இணைந்து செயல்படுவது இப்போதைய தேவை என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.