பெர்த்தாம் வேலியில் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு

0
18

புத்ராஜெயா, நவ.12- கேமரன்மலை, பெர்த்தாம் வேலியில் ஆறு  ஆண்டுகளுக்கு முன்பு  ஏற்பட்ட ​திடீர் வெள்ளத்திற்கு காரணமாக இருந்த டி.என்.பி. (tnb) எனப்படும் தெனாகா நேஷனல்​ பெர்ஹாட், பாதிக்கப்பட்ட 100 பேருக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கூட்டரசு நீதிமன்றம் இன்று அறிவித்தது.

2013 ஆம்  ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தில் நால்வர் ​​உயிரிழந்தனர். அதேவேளையில் வெள்ளக்காடாக மாறிய இச்சம்பவத்தில்  பெர்த்தாம் வேலியை சேர்ந்த மக்கள் பெரும் பொருள் சேதத்திற்கு ஆளாகினர்.

ரிங்லெட்டுக்கு முன்னதாக அமைந்துள்ள பெர்தாம் வேலியில் தெனாகா நேஷனல் நிர்வகித்து வரும் ​மின்சார ​நீர் அணைக்கட்டு திறக்கப்பட்டதால் நீர் மடை  திறந்த  வெள்ளமாக மாறி, அருகில் உள்ள வீடுகளை பாதிக்கச் செய்துள்ளது. அச்சமயத்தில் டி.என்.பி.   அணைக்கட்டை திறந்தது விவேகமான முடிவு அல்ல  என்று கூறி டி.என்.பி..யின் மேல்முறையீட்டை  கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.