பேனர் விழுந்து இளம்பெண் பலியான விவகாரம் உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம்

0
8

சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வரும் அதிமுக பிரமுகர்களை வரவேற்க நேற்று துரைப்பாக்கம் வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைத் தடுப்புகளிலும் வரிசையாக பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.

இதில் ஒரு பேனர், சாலையில் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்தது. பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேசஷாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் இச்சம்பவம் குறித்து முறையீடு செய்தார்

சட்டவிரோத பேனர்கள் மூலமாக சாலைகளை ரத்தத்தால் வர்ணம் பூச எத்தனை லிட்டர் ரத்தம் உங்களுக்குத் தேவைப்படும்?”, என எச்சரித்த நீதிபதிகள், அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணனை நோக்கிக் கேள்வி எழுப்பினர்.

இந்த முறையீட்டை, வழக்காகத் தாக்கல் செய்யும் போது, கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.