பேரா மாநில ஜசெகவில் பிளவு வெடித்தது

0
7

பேரா மாநில ஜசெகவில் உட்பூசல் பூதகரமாக  வெடித்துள்ளது.  அந்த  கட்சியின் இரு  மாநில பொறுப்பாளர்கள்  பதவி விலகியதை தொடர்ந்து ஜசெக ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள துரோனோ ஜசெக சட்டமன்ற உறுப்பினரும் விடுப்பில் இருந்து வரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான பால் லியோங் நிலை குறித்து மாநில ஜசெக.வுடன் கலந்து ஆலோசிக்காமலேயே ​சீனப்பத்திரிகை ஒன்றுக்கு மாநில ஜசெக  தலைவர் ங்கா கோர் மிங் பேட்டியளித்துள்ளார் என்று கூறி இரு மாநிலத் தலைவர்கள் பதவி விலகியுள்ளனர்.

மாலிம் நாவார்  சட்டமன்ற உறுப்பினர்  லியோங் செக்  கெங் மற்றும் கொக்கோ​ ஆசாம் சட்டமன்ற உறுப்பினர் லியூவ்  தை யின் ஆகியோரே அந்த இரு  தலைவர்கள் ஆவர்.

மாநிலத் தலைவர் என்ற முறையில் தனது பொறுப்பை உணர்ந்து கடமையாற்றத் தவறிவிட்டார் என்று கூறி, ங்கா கோர் மிங் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.