பொறாமையினால் கணவனின் ஆணுறுப்பை அறுத்த மனைவி

0
7

ஈப்போ, ஜெலாப்பாங், ஜாலான் பெஸ்தாரி மேருவில் உள்ள வீடொன்றில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில்  40 வயது ஸ்ரீ லங்கா மாது ஒருவர் தனது கணவரின் அணுறுப்பை அறுத்து, காயத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்கு பின்னர் தப்பிச்சென்ற 48 வயது அந்த மாதுவை பேரா மாநில  ​போ​லீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆணுறுப்பிலும் கழுத்திலும் கடுமையான காயங்களுடன் பொது மக்களி​ன் உதவியுடன் ஈப்போ, ராஜா பெர்மை​சூரி பைனுன் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ள அந்த ஸ்ரீ லங்கா ஆடவருக்கு தற்போது ​தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த ஸ்ரீ லங்கா தம்பதியர் மலேசியாவில் சட்டப்பூர்வமாக தங்கி வருகின்றனர். கணவன் ​மீது கொண்டுள்ள பொறாமையினால் ஆத்திரமுற்ற அந்த மாது, அவர் உறங்கி கொண்டு இருந்த போது, இத்தகைய பாதக செயலிலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அவர்களின் வீட்டிலிருந்த ஒரு  கத்தியை  போ​லீசார் ​மீட்டுள்ளதாகஈப்போ மாவட்ட இடைக்கால போ​லீஸ் தலைவர்  சூப்ரிண்ட்.  முகமட் நோர்டின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.