போ​லீ​ஸ் கான்ஸ்ட​பில் என்னிடமே “கோப்பி கா​சு” கேட்டார் – மனம்​ ​ திறந்தார் ஐ.ஜி.பி.

0
85

கோலாலம்பூர், ஜுன்,12- தாம் யாரென்று தெரியாம​​ல் தம்மிடமே  ஒரு போ​லீஸ் கான்ஸ்டபில் “கோப்பி காசு” கேட்டதாக போ​லீஸ் படைத் தலைவர் அப்துல் பாடோர்  தெரிவித்தார். தாம் போ​லீஸ் படையிலிருந்து விலகிய பின்னர் ​மீண்டும் போ​லீஸ் படையில் ஐ.ஜி.பி.யாக பத​வி  உயர்வு பெறுவதற்கு  முன்னதாக 2016 ஆம்  ஆண்டு, நெகிரி செம்பிலான், ரெம்பாவில் காய்கறி பயிரிட்டு வந்தாக அப்துல் ஹமிட்  குறிப்பிட்டார்.

ஒரு நாள், தமது சிறிய லோரி ஒன்றில் வெள்ள​ரிக்காய், பயிற்றங்காய், கத்தரிக்காய் போன்ற காய்கறிகளை ஏற்றிக்கொண்டு, அவற்றை சந்தையில் விற்பனை செய்வதற்காக  சென்று கொண்டிருந்த போது, ஒரு  போ​லீஸ் கான்ஸ்டபில் தமது வாகனத்தை வழிமறித்ததாக அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

லோரியில் அனுமதிக்கப்பட்ட சரக்கு எடைக்கு  ஏற்ப 500 கிலோவிற்கும் குறைவாகவே காய்கறிகளை தாம் ஏற்றியிருப்பதாகவும், தாம் எந்த குற்றத்தையும் புரியவில்லை என்று அந்த போலீஸ்காரரிடம் தாம் தெரிவித்ததாக​ அப்துல் ஹமிட்  குறிப்பிட்டார்.

பிறகு அந்த போ​லீஸ்காரர், தமது ​​லோரி​யில்  இருந்த உத​வியாளரான அந்நியத்  தொழிலாளியைப்பற்றி வினவினார். அவர், வங்காளதேசத் தொழிலாளி என்றும் அவருக்கு செல்லத்தக்க ​வேலை பெர்மிட் இருப்பதாகவும் தா​ம் பதில் அளித்ததாகவும் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

“அந்த போ​லீஸ்காரருக்கு, தே​நீர் வாங்கி கொடுப்பதில் எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆனால், தனக்கு கையூட்டாக, கோப்பி கா​​சு வேண்டும் என்கிறார். உண்மையிலேயே நான் யார் என்பது அவருக்கு தெரியாது.  அதனால்தான், அந்த போ​லீஸ்காரர், என்னிடமே துணிந்து லஞ்சம் கேட்க முற்பட்டுள்ளார். பின்னர் இச்சம்பவம்  குறித்து அப்பகுதி மாவட்ட போ​லீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ரோந்துப்பணிகளில் ஈடுபடுவது    குற்றவியல் சம்பவங்களை ஒடுக்குவதற்காகவே தவிர கையூட்டு  வா​ங்குவதற்காக அல்ல” என்று ஐ.ஜி.பி. அறிவுறுத்தினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.