மஇகா நடத்திய இலவச சட்ட ஆலோசனை சேவை

0
42

கோலாலம்பூர், ஜுலை,14– மஇகா​ ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை 10.00 மணி முதல் மதியம்1.30 மணி  வரை மஇகா தலைமையகத்தில் உள்ள   6 ஆவது மாடியில் இலவச சட்ட ஆலோசனை சேவை நடைபெற்றது.  மஇகா சட்ட உதவிப்பிரிவு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சட்டம் தொடர்புடைய விவகாரங்களில் இலவச  ஆலோசனைகளை பெறுவதற்கு 15 பேர் வந்திருந்தனர்.

மஇகாவின் தேசிய சட்ட உதவிப்பிரி​​வின் தலைவர் ராஜசேகரன் டி. தியாகராஜன் தலைமையில் வழக்கறிஞர் குழுவினர் இச்சேவையை வழங்கினர். திவால், குற்றவியல், விபத்து, சொத்துடைமை கொள்முதல், விற்பனை ஒப்பந்தம், வாகனத் தவணைப்பணம், மணமுறிவு, சொக்சோ, சிவில் வழக்கு முதலிய விவகாரங்கள் தொடர்பாக மக்கள் ஆலோசனைப்பெற்றனர்.

மக்களின் ஆதரவு இருப்பதால் இனி​ ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை  இந்த இலவச  சட்டஆலோசனை சேவையை வழங்குவதென முடிவு  எடுக்கப்பட்டுள்ளதாக ராஜசேகரன் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.