மகாதீரின் கண்ணாடி வீட்டிலிருந்து ஜக்கீர் நாய்க் கல்லெறிகிறாரா?

0
12

– பிரபல ஊடகவியலாளர் பெரு. அ. தமிழ்மணி கேள்வி

கோலாலம்பூர் ஆக-15-ஜக்கிர் நாக்- தற்போது . இந்நாட்டிலுள்ள சீனர்களையும் இந்தியர்களையும்  பழைய விருந்தாளிகளென்றும், அதனால், புதிய விருந்தாளியாகிய தன்னை இங்கிருந்து வெளியேறச் சொல்லுகின்ற இவர்கள் முதலில் இந் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று சொல்லியிருப்பதால், அவருக்கு இதுவரை,ஆதரவு அளித்து வருகின்ற- துன் மகாதீரை- இப்படிச்சொன்னதினாலே, ஒருவகையில் மகாதீரையும் பதம் பார்த்துள்ளாரென்றே தெரிகிறது,

காரணம்; மகாதீரின் தாத்தா குடும்பமும் -ஒரு கால கட்டத்தில், இந்தியாவின் கேரளாவிலிருந்து இங்கு குடியேறியதென்பதால், மகாதீரையும், அவரின் வாரிசுகளையும் இந்த நாட்டிலிருந்து வெளியேற மறைமுகமாக  ஜக்கீர் சொல்லுகிறாரா? என்று அறிந்துக்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, இதன் மூலம் இப்போது அவருக்கு அடைக்கலம் தந்துள்ள மகாதீரின் கண்ணாடி வீட்டிலிருந்தே ஜக்கீர் கல்லையெறியத் துவங்கியுள்ளாரா, என்று பிரபல ஊடகவியலாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத் தேசியத் தலைவருமான முனைவர் பெரு. அ. தமிழ்மணி  கேள்வி கேட்டுள்ளார்.

இந்திய நாட்டு அரசால் , அன்னிய நாட்டுப் பணவர்த்தனையில் தேடப்படும் குற்றவாளியான ஜக்கீருக்கு அடைக்கலம் தந்துள்ளதால் அவர் இந்நாட்டிற்கு திடீர்  விருந்தாளியாகி விட்டார், அதனால், அவர் இன்று;   1300 ஆண்டுகளுக்கு மேல் தலைத் தலைமுறையாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்தியர்களையும் சீனர்களையும் வெளியேறச் சொல்லுமளவுக்கு மகாதீரின் நடவடிக்கை  கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.என்று திசைகளின் நிர்வாக ஆசிரியருமான “எழுத்தாண்மை ஏந்தல்”பெரு.அ.தமிழ்மணி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.