மகாதீரை ஜிம்பாவே அதிபரோடு ஒப்பிடாதீர்கள்

0
232

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை ஜிம்பாவே நாட்டு அதிபர் முகாபேவோடு ஒப்பிடாதீர்கள் என டத்தோ சிறீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் மறுமலர்ச்சி வித்திட வேண்டுமெனும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு டாக்டர் மகாதீர் தயாராக இருக்கிறார். அதற்காக அவர் தம்மை முழு ஈடுபாட்டோடு தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று இங்கு கோலாலம்பூர் நீதிமன்றத்தில் செய்தியாளர்க்ளிடம் கூறினார்.

டாக்டர் மகாதீர் மீது அரசாங்கம் அவதூறுகளை பரப்பிவருகிறது. அவரோடு முகாபேவை ஒப்பிடுவது சரியான பார்வையல்ல என்றும் கூறினார்.

மகாதீருக்கும் – முகாபேவுக்கும் 93 வயது. ஜிம்பாவே நாட்டு அதிபராக முகாபே இருந்தபோது அவர் ஒரு சர்வாதிகாரியாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.